சிறுபிள்ளைகள்

வளர்ச்சி

சிறு பிள்ளைகள் தாமாகவே நன்கு வளர்ச்சி பெறுவதற்கு தேவையானவை என்ன?

சிறு பிள்ளைகளுக்கு கவனிப்பு, பராமரிப்பு, சுகாதாரமான உணவு, நட மாட்டம், வேறு பிள்ளைகளுடன் தொடர்பு, போதுமான உறக்கம், பாது காப்பு மற்றும் அன்பு தேவைப்படுகின்றது. அத்துடன் அவர்களுக்கு பாட சாலை செல்வதற்கும் எதிர்கால வாழ்விற்கும் ஆயத்தமாக உந்துதல் மற்றும் உற்சாகம் தேவைப்படுகின்றது.

 

உங்கள் பிள்ளைக்காக நீங்கள் ஒழுங்காக நேரம் எடுத்துக் கொள்ளுங் கள். நீங்கள் அவருக்கு ஒரு கதையைக் கூறுங்கள், ஒரு பாடலைப் பாடுங்கள் அல்லது அவருடன் சேர்ந்து ஒரு படப் புத்தகத்தைப் பாருங் கள். வெளியே நடந்து செல்லும்போது புதியவற்றைக் கண்டறிவதுடன் கற்றுக்கொள்ளவும் முடிகின்றது. அடிக்கடி உங்கள் பிள்ளையுடன் சிறுவர் விளையாட்டுத் திடலுக்குச் செல்லுங்கள், இதன்மூலம் பிள்ளை வேறு பிள்ளைகளுடன் விளையாடுவதுடன் பழகிக் கொள்ள முடியும். பிள்ளைகள் கதைப்பது மற்றும் விளையாடும்போது தமது வளர்ச்சிக்கு மற்றும் பின்னரான பாடசாலை வெற்றிக்கு தேவையான அதிகமான வற்றைக் கற்றுக்கொள்கின்றனர்: செவிகளால் கேட்டுக்கொள்வது, தானாக விளங்கப்படுத்துவது, அவதானிப்பது, தன்னை சுதாகரித்துக் கொள்வது, தன்னை ஒருநிலைப்படுத்துவது போன்றவை.

 

உங்கள் பிள்ளை எவ்வாறு உலகைக் கண்டுகொள்கிறதோ, வேறு பிள்ளைகளுடன் விளையாடுகிறதோ, பாடுகிறதோ, கதைகளைக் கேட்கி றதோ, இயற்கையை அனுபவிப்பதுடன் தானாக நடமாடுகின்றதோ, அவற்றில்; முக்கிய அனுபவங்களை பெறுவதுடன், அவை பின்பு பாலர் பாடசாலை மற்றும் பாடசாலை வாழ்வில் முக்கிய அர்த்தத்தை வழங்கிக் கொள்ளும்.

 

Graubünden ல் விசேட ஊக்குவிப்பு வசதிகளான குழந்தைகள் நீச்சல், தவழும் பிள்ளைகளுக்கான குழுக்கள், தாய்-பிள்ளை- அப்பியாசம் / தந்தை-பிள்ளை-அப்பியாசம் அல்லது விளையாட்டுக்குழுக்கள் உள்ளன.

 

நீங்கள் இதுகுறித்து வேறு பெற்றோர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் பிரதேசத்தில் உள்ள வசதிகள் குறித்து உள்ஊராட்சிபையில் விசாரித்துக் கொள்ளுங்கள்.

 

65 குறும்படங்கள் 13 மொழிகளில்

பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு பல வழமையான நாளாந்த நிகழ்வு களின்போது ஊக்கம் கொடுக்கலாம், அவற்றை அனுபவிப்பது, கண்டு பிடிப்பது, விளையாடுவது மற்றும் கற்றுக்கொள்வது போன்றவை: பயிலும் பட்டறையில், சமையலறையில் கரட் சீவும்போது அல்லது மழைக்குட்டையில் விளையாடும்போது சேர்ந்து உதவுவது.

 

65 குறும்படங்கள் 13 மொழிகளில் பார்க்க முடிவதுடன், பல்வேறு குறிப்புகள் மற்றும் துணுக்குகள் காண்பிக்கப்படுகின்றன.