வளர்ப்பது

பிள்ளைகள் மீதான வன்முறை

நான் எனது பிள்ளையை அடிக்கலாமா?

சுவிசில் பிள்ளைகள் மீது வன்முறை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இதன்போது அடிப்பதால் ஒரு எதிர்மறையான விளைவை மட்டுமே ஏற்படுத்துகின்றது. பிள்ளையுடனான உறவிலும் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. இது நம்பிக்கையீனத்தையும் கட்டுப்பாட்டையும் இழக்கும் உணர்வையும் அதிகரிக்கச் செய்கின்றது. அடிப்பதன் மூலம் சுயகெளரவம் புண்படுத்தப்படுவதுடன் தன்நம்பிக் கையை பலமிழக்கச் செய்கின்றது. சிலவேளைகளில் பிரச்சினைகளின் போது வன்முறையைப் பாவிப்பதுதான் தீர்வு என பிள்ளை நம்புவதுடன், வேறு பிள்ளைகளை அடிப்பதற்கு ஆரம்பிக்கின்றது. அடித்து வளர்க்கும் பிள்ளைகள் அதிகமாக சூழலில் பிரச்சினையாக உள்ளனர். அவர்களுக்கு அதிகளவு உடல் மற்றும் உளப் பிரச்சினைகள் அல்லது பாடசாலையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

 

அடிப்பதால் எதுவித பலனும் ஏற்படுவதில்லை. சிலவேளைகளில் ஒரு தாயோ அல்லது தகப்பனோ மனஅழுத்தமான வேளையில் «உணர்ச்சி வசப்பட்டு» நடந்து கொள்ளலாம். முக்கியமானது அதன்பின் நடந்து கொள்ளும் விதமாகும். பெற்றோர் அதற்காக மன்னிப்புக் கேட்கலாம். நீங்கள் ஒன்றுசேர்ந்து பிள்ளையுடன் ஒரு அமைதியான வேளையில் இவ்வாறு நடந்த விதம் குறித்தும், அடுத்த தடவைகளில் எவ்வாறு நடந்து கொள்ளலாம் எனவும் ஒன்றுசேர்ந்து யோசித்துக் கொள்ளலாம்.

 

பெற்றோர் அவசர அழைப்பு எனும் ஆலோசனை நிலையம் பெற்றோர், குடும்பங்கள் மற்றும் பராமரிப்பு நபர்களுக்கு அவசர வேளைகளில் அல்லது பிள்ளைகளின் வளர்ப்பு மற்றும் வளர்ச்சியில் எழும் கேள்விகளுக்கு எந்த நேரமாக இருப்பினும் ஒரு நாளில் 24 மணி நேரமும் உதவியும் ஆலோசனையும் வழங்குகின்றது. தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக ஆலோசனை பெறுவது இலவசமானது. தொலைபேசி 0848 35 45 55.

 

Pro Juventute ன் அவசர உதவி இலக்கமான 147 பிள்ளைகளுக்கு மற்றும் இளையோருக்கு கேள்விகள், பிரச்சினைகள் மற்றும் அவசர நிலமைகளின் போது உதவிகளை வழங்கும். எந்த நேரத்திலும். தொலைபேசி SMS, Chat மின்னஞ்சல் மற்றும் இணையச்சேவை ஊடாக தொடர்பு கொள்ளளலாம்.