பல உதாரணங்களுடனான சாதாரண விளக்கங்களை „Pro Juventute பெற்றோருக்கான கடிதம்;“ வழங்குகின்றது. பிறப்புத் தொடக்கம் 6வது வயது வரை நீங்கள் ஒழுங்காக பிள்ளையின் வயதிற்கேற்ற மற்றும் தற்போதைய வளர்ச்சிப்படிகள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வீர்கள். பல உளுரட்சிமண்றங்கள் இந்த வசதியைப் பயன்படுத்துவதுடன் பெற்றோருக்கான இக் கடிதத்தை பெற்றோருக்கு அனுப்பிவைக்கின்றது. நீங்கள் நேரடியாகவும் Pro Juventute வை பெற்றுக்கொள்ளலாம்.
பிறமொழிபேசும் பெற்றோருக்கு Pro Juventute „எங்கள் பிள்ளை“ எனும் கைநூலை பல மொழிகளில் வெளியிடுகின்றது. இந்தக் கைநூலில் பிள்ளையின் பிறப்புத் தொடக்கம் 6 வயது காலம் வரையாக, ஒவ்வொரு வருடமும் ஒரு கைநூலை வெளியிடுகின்றது.
வளர்ப்பு விடயம் குறித்து வித்தியாசமான நிகழ்ச்சிகள் மற்றும் பாடங்கள் இடம்பெறுகின்றன, உதாரணமாக புதிதாகப் பெற்றோரான ஜோடிகளுக்கு, தனியாக வளர்க்கும் பெற்றோருக்கு, பிறமொழிபேசும் பெற்றோருக்கு அல்லது இளையவர்களுடன் வாழும் பெற்றோருக்காகும். பெற்றோருக்கான பாடங்கள் பெற்றோரை அவர்களின் வளர்ப்பு அறிவிலும் பிள்ளையுடனான உறவிலும் உறுதிப்படுத்தி உற்சாகம் கொடுக்கின்றது.
சிலவேளைகளில் நீங்கள் உங்கள் பிள்ளையுடன் வீட்டில் தனியா இருப்பதுடன் முக்கியமான கேள்விகளை வைத்திருக்கலாம். அல்லது உங்களுக்கு குறைவான விடுமுறை நேரம் இருக்கலாம். அப்படியானால் தொலைபேசி மூலமாக ஒரு நேரடியான ஆலோசனை பெறுவது (பகுதிரீதியாக உங்கள் மொழியிலும்) நன்மையாக அமையலாம். அத்துடன் இணையத்தளத்தில் பெற்றோருக்கான தகவல்தள வசதியுள்ளது. இதில் பல கேள்விகளும் அதற்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பதில்களையும் நீங்கள் காணலாம். குடும்பப் பத்திரிகைகள் இவை குறித்து பகுதிரீதியாக இணையத்தளத்தில் விரிவாக்கப்பட்டு முக்கிய தகவல்களை வழங்குகின்றன.