பிள்ளைகளுக்கு, தமக்காக நேரம் எடுக்கும், தம்முடன் கதைக்கும் மற்றும் தாம் சொல்வதைக் கேட்கும் வயதுவந்தோர் தேவைப்படுகின் றனர். பிள்ளைகளுக்கு, உற்சாகம் கொடுக்கவும், புதியவற்றை பரிசோதித்துப் பார்க்கவும் வயதுவந்தோர் தேவைப்படுகின்றனர். பிள்ளைகளுக்கு, ஏதாவது சிரமமாக இருந்து, அதை விடாப்பிடியாக உறுதியுடன் செயற்படுத்த விரும்பும்போது அதற்கு உற்சாகம் கொடுக்க வயதுவந்தோர் தேவைப்படுகின்றனர். பிள்ளைகளுக்கு பிரச்சினைகளைத் தீர்ப்பது அத்துடன் எவ்வாறு மீண்டும் சமாதானம் செய்து கொள்வது என்பதை முன்னுதாரணமாகக் காட்டக்கூடிய வயதுவந்தோர் தேவைப்படுகின்றனர்.
பெற்றோர் பிள்ளைகளை அவர்களால் இன்னும் சரிவரக் கணித்துக் கொள்ள முடியாத ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். ஆகவே நீங்கள் எல்லைகளை நிர்ணயிப்பதுடன் தெளிவான விதிகளை மேற் கொள்ள வேண்டும். அத்துடன் பிள்ளைகள் சொந்தமாக முடிவெடுக்கக் கற்றுக்கொள்வதும் முக்கியமானதாகும். அவர்கள் தமது சொந்த அபிப்பிராயாத்தை விருத்தி செய்வதுடன் ஆம் அல்லது இல்லை எனக் கூறு வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.
உங்கள் பிள்ளையின் உணர்வுகள் மற்றும் எண்ணங்களை சிறுவயதிலிருந்தே முக்கியமானது என எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தமது எண்ணத்தை தாமாகவே வெளிப்படுத்த உற்சாகம் கொடுங்கள். அவர்கள் சொந்தமாக முடிவெடுப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குங்கள். இதன்மூலமாக பிள்ளைகள் தன்நம்பிக்கை மற்றும் தமது தனிப்பட்ட உறுதியை விருத்தி செய்து கொள்வார்கள்.