வளர்ப்பது

இலத்திரனியல் ஊடகங்கள்

நான் எனது பிள்ளையை இலத்திரனியல் உலகில் எவ்விதம் பாதுகாப்பேன்?

பிள்ளைகளும் இளையோரும் ஒரு பல்வேறுபட்ட ஊடக உலகில் வளர்கின்றனர். அவர்கள் தமது ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சி பார்க்கின்றனர், கணனியில் –விளையாடுகின்றனர், இணையத்தளத்தில் தகவல்களை அறிவதுடன் கைத்தொலைபேசி மூலமாக அவர்களது நண்பர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளுகின்றனர். புதிய ஊடகங் கள் பாடசாலையில் மற்றும் உங்கள் பிள்ளையின் நாளாந்த வாழ்வில் வழமையாகிவிட்டது. அவை பிள்ளைகள் மற்றும் இளையோருக்கு பல வளர்ச்சிக்கான- மற்றும் கற்பதற்கான சந்தர்ப்பங்களை வழங்குகின் றது, இருப்பினும் ஆபத்துகளும் எழவே செய்கின்றன. தொலைக்காட்சி மற்றும் இணையத்தளம் அடிமைநிலைக்கு உள்ளாக்கலாம், பிள்ளை களும் இளையோரும் வெருட்டப்படலாம், அவர்களின் தனிப்பட்ட தர வுகள் மற்றும் படங்கள் துஸ்பிரயோகப்படுத்தப்படலாம் அல்லது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படலாம்.

 

பௌதீக உலகில் பிள்ளைகளுக்கு எவ்வாறு வயதுவந்தவர்களின் அரவணைப்புத் தேவைப்படுகின்றதோ அதேபோன்று இலத்திரனியல் உலகிலும் அவர்களுக்கு அரவணைப்புத் தேவைப்படுகின்றது. ஆகவே முக்கியமானது என்னவென்றால், நீங்கள் முதல் வருடங்களில் அவர்களுடன் ஒன்று சேர்ந்து அவர்கள் வயதிற்கேற்ற இலத்திரனியல் ஊடகங்களை தெரிவு செய்வது மற்றும் அதிலிருந்து பெற்ற அனுபவங்கள் குறித்து அவர்க ளுடன் பேசிக்கொள்வதாகும். உங்கள் பிள்ளையுடன் ஒன்றுசேர்ந்து அவர்கள் எவ்வளவு நேரம் அதனுடன் நேரத்தைக் கழிக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதுடன் தெளிவான ஒரு எல்லையை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இதனூடக உங்கள் பிள்ளை ஒரு பாதுகாப்பான ஊடகப் பாவிப்பை பழகுவதுடன், அவர்கள் அதன் உள்ளடக்கத்தை சொந்தமாக பரிசோதித்து அறிந்து கொள்வதுடன், அதிலுள்ள ஆபத்துக்களை தெரிந் துகொண்டு, அவைகளிலிருந்து எவ்விதம் பாதுகாத்துக் கொள்வது என்பதையும் அறிந்து கொள்ளவர்.