பாலர்பாடசாலை- மற்றும் பாடசாலைப் பிள்ளைகளைப் பராமரிப்பது

பாடசாலை விடுமுறைக்காலத்தின் போதான பராமரிப்பு

பாடசாலை விடுமுறைக் காலத்தில் எங்கு எனது பிள்ளை பராமரிக்கப்படுவார்?

தொழில் புரியும் பெற்றோர்களில் பலருக்கு அனைத்து விடுமுறைக் காலங்களிலும் சொந்தமாக விடுமுறை எடுப்பது இயலாததாகும். பாலர்பாடசாலை மற்றும் பாடசாலைப் பிள்ளைகளுக்கு பல நகரங்களிலும் பராமரிப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன, இவற்றில் ஒருபகுதி பாடசாலையால் ஒழுங்குசெய்யப்படுகின்றன. பாடசாலைகளில் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இவ்வாறான வசதிகள் குறித்து நீங்கள் கேட்டறிந்து கொள்ளுங்கள். தனிப்பட்ட ரீதியில் குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து தமது பிள்ளைகளை தாங்களே மாறி மாறிப் பராமரித்துக் கொள்ளும் ஏற்பாட்டையும் செய்து கொள்ளலாம்.