தொழில் தெரிவு

தொழிற்கல்விக்கான இடம் நிராகரிக்கப்படல்

நிராகரிப்பைப் பெற்றுக்கொண்டால், நான் எனது பிள்ளையை எவ்வாறு உற்சாகப்படுத்த முடியும்?

தொழிற்கல்விக்கான இடத்தைத் தேடுவது அதிகமான இளையோருக்கு மிகவும் சிரமமான விடயமாகும். அதிகமான தொழில்களுக்கு இதற்காக விண்ணப்பிக்கும் இளையோரிலும் பார்க்க குறைவான தொழிற்கல்வி இடங்களே உள்ளன. இதனாலேயே அவர்கள் மீண்டும் மீண்டும் நிராகரிப்பைப் பெறுகின்றனர்.

 

இந்த வேளையில் மிகவும் முக்கியமானது, பெற்றோர் தமது பிள்ளை யுடன் அவர்களது நம்பிக்கை மற்றும் ஏமாற்றங்கள் குறித்து வெளிப்படையாகக் கதைத்துக் கொள்வதாகும். உங்கள் பிள்ளைக்கு இதன் போது உறுதியையும் நம்பிக்கையையும் கொடுத்து உதவுங்கள். நிராகரிப்புக் கிடைத்தாலும் விடாமல் தொடர்ந்து புதிதாக விண்ணப்பிக்க அவர்களுக்கு உற்சாகம் கொடுங்கள். உங்கள் பிள்ளை தன்நம்பிக் கையை மேலும் வளர்க்க உதவுங்கள்.

 

நீங்கள் உங்கள் பிள்ளைக்கு ஆரம்பம் முதலே அவரது விருப்பமான தொழிலுக்கு மாற்றீடான ஒரு தொழிலை விரும்புவதற்கு உதவ முடியும். இது விருப்பமான தொழிலுக்கான தொழிற்கல்வி வெற்றிடம் இல்லாதுவிடின் அல்லது விரும்பிய தொழிலுக்கு ஏற்ற பாடசாலைப் புள்ளிகள் போதாதிருந்தால் உங்கள் உதவி பிரயோசனமாக இருக்கும். பலவிதமான தொழில்கள் உள்ளன, அவை குறித்து இளையோர்கள் இதுவரை அறியாமல் உள்ளனர். உங்கள் பிள்ளைக்கு, நீங்கள் ஆண் அல்லது பெண் தொழில் ஆலோசகருடன் சேர்ந்து நல்ல சந்தர்ப்பத்துடனான பொருத்தமான தீர்வைப்பெற உற்சாகம் கொடுங்கள். எவ்வாறிருந்தாலும் தொழில் ஆலோசனை நிலையத்திற்குச் செல்வது நிச்சயமாகப் பலனைத் தரும்.