தொழில் தெரிவு

தொழிற்கல்விக்கான இடங்களைக் கண்டுகொள்வது

தொழிற்கல்விக்கான இடங்களைக் கண்டுகொள்வது

இளையோர் தாங்களாகவே எங்கு தொழிற்கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என அறிந்து கொள்ள வேண்டும். இவற்றை வேறு இடங்களுடன் மாநிலத்தின் தொழிற்கல்வி வெற்றிடங்கள் குறித்து தகவல் தரும் LENA அத்துடன் நிறுவனங்களின் இணையத்தளங்கள் அல்லது நாளாந்தப் பத்திரிகைகளில் காணலாம்.

 

ஆரம்பத்தில் நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் தொழிலகங்களுடன் தொடர்பு கொள்வது உதவியாக அமையலாம். இதன்பின் எழுத்து மூலமான விண்ணப்பங்களை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் தொழில் ஆலோசனை நிலையங்கள் இளையோர் எவ்வாறு தமது விண்ணப்பங்களை எழுதுவது மற்றும் எந்தெந்த சான்றிதழ்களை அதனுடன் இணைக்க வேண்டும் என்பதைக் காண்பிப்பார்கள். இதன் போது பெற்றோரும் பிள்ளைகளுக்கு இயலுமான அளவு உதவி செய்ய வேண்டும். இதற்கான எடுத்துக்காட்டல்கள் இணையத்தளத்தில் உள்ளது.

 

ஏறத்தாழ அனைத்து இளையோரும் - திறமையான பெறுபேறுகள் பெற்றிருப்பினும்- அவர்கள் ஒரு தொழிற் கல்விக்கான இடத்தைப் பெறும்வரை அதிகமாக பல விண்ணப்பங்களை எழுத வேண்டியிருக் கும், ஏனென்றால் இதற்கான வாய்ப்புகள் குறைவானதாகும். இது மிக விசேடமாக குறைவான புள்ளிகளைப் பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பொருந்தும். இளையோர் தமக்கு விருப்பமான தொழிற்கல்வி இடங்களை மட்டும் தேடாமல் ஒரே வேளையில் பலவிதமான தொழில்கல்வி இடங்களைத் தேடுவதன் மூலம் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன.

 

தொழில் தெரிவு மற்றும் தொழிற்கல்வி இடத்தைத் தேடுவது ஏற்கனவே உயர்தரத்தின் இறுதி வருடத்திற்கு முன்பான வருடத்திலேயே ஆரம்பமாகிவிடும். இந்தக் காலத்தில் ஏற்கனவே ஒருவர் தொழிற் பயிற்சியை முயற்சி செய்து பார்க்கலாம்.