பாலியல் உடல்நலம் மற்றும் உரிமைகள்

பாலியல் உடல்நலம் மற்றும் உரிமைகள்

பாலியல் விடயங்கள் குறித்து நான் எங்கு தகவல்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்?

பாலியல் உடல்நலம் என்பது உளரீதியான, உணர்வு ரீதியான, சிந்தனை ரீதியான மற்றும் சமூகத்தில் பாலியல் குறித்த நல்வாழ்வின் ஒரு நிலையைக் குறிப்பிடுகின்றது. இதற்கு முன்நிபந்தனையாக பாலியலில் மற்றும் பாலியல் உறவுகளில் ஒரு மரியாதையான அணுகுமுறை தேவைப்படுகின்றது. முக்கியமானது சந்தர்ப்பம் கிடைத்தலும், இரசிக்கத்தக்க மற்றும் ஆபத்துக்கள் குறைந்த பாலியல் அனுபவங்களைப் பெறுவதுமாகும், அதாவது எவ்வித வற்புறுத்தல், இனஒதுக்குதல் மற்றும் வன்முறை அற்றதாக இருத்தல் வேண்டும்.

 

சுவிசில் அனைத்து பாலியல் செயற்பாடுகளும் சொந்த விருப்பத்தின்படியே அமைந்திருக்கும். எவரும் அதற்கு வற்புறுத்த முடியாது. அத்துடன் ஒவ்வொரு மனிதருக்கும் தனது உடம்பைக் கெடுதிக்கு ஆளாகாமல் பாதுகாக்கும் உரிமையுள்ளது. இளம் பெண்கள் மற்றும் பெண்களின் பாலியல் உறுப்புகளை சிதைப்பது அல்லது வெட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது, இது சுவிசிலேயோ அல்லது வெளிநாட்டிலேயோ எங்காக இருப்பினும் செய்யப்படக்கூடாது.

 

பாலியல் உரிமைகள், கருத்தடைப் பாதுகாப்பு, பாலியலால் தொற்றக்கூடிய நோய்கள், கருத்தரிப்பு மற்றும் பிறப்பு, கருக்கலைப்பு அத்துடன் பாலியல் செயற்பாடுகள் மற்றும் சேர்ந்து வாழ்தல் போன்றவைக்கான கேள்வி விடைகளை இணையத்தளத்திலுள்ள தகவல் களஞ்சியத்தில் அல்லது ஒரு ஆலோசனை நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.