நோய் ஏற்படல்

நான் எப்போது வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்?

நான் எப்போது வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்?

வைத்தியசாலைக்கு (அல்லது நோயாளர் நிலையம்) அதிகமாக சிகிச்சை வழங்கும் ஆண் அல்லது பெண் வைத்தியர் அனுப்பிவைப்பார். இதற்கான காரணம் ஒன்றில் பரிசோதனைக்காக, ஒரு சத்திரசிகிச்சைக்காக அல்லது ஒரு சிகிச்சைக்காக இருக்கலாம். அங்கு செல்லும்போது நீங்கள் உங்கள் மருத்துவக் காப்புறுதி அட்டையைக் காட்ட வேண்டும். குறைந்தது வைத்தியசாலைக்குச் செல்வதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக வைத்தியசாலையிலிருந்து ஒரு அனைத்து தகவல்களும் அடங்கிய தபாலைப் பெற்றுக்கொள்வீர்கள்: உதாரணமாக, நீங்கள் எவற்றை எடுத்து வரவேண்டும் மற்றும் நீங்கள் எவ்வாறு உங்களைத் தயார்படுத்த வேண்டும் என விளக்கப்பட்டிருக்கும்.

 

மருத்துவக் காப்புறுதி நிலையத்தின் அடிப்படைக் காப்புறுதி ஒரு பொதுவான சிகிச்சை நிலையத்தில் வைத்தியச் சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தைச் செலுத்தும். மருத்துவக் காப்புறுதிகள் விலை அதிகமான தனிப்பட்ட அல்லது அரைவாசி தனிப்பட்ட மேலதிக காப்புறுதிகளை வழங்குவார்கள். அரைவாசி தனிப்பட்ட மேலதிக காப்புறுதி செய்தால் உங்களுக்கு இரு கட்டில்கள் உள்ள அறைக்கு உரிமையுண்டு. தனிப்பட்ட மேலதிக காப்புறுதி செய்திருந்தால் உங்களுக்கு ஒரு தனியறை பெறுவதற்கு உரிமையுண்டு.

 

பலவிதமான வைத்தியசாலைகள் உள்ளன. Graubünden ல் பல்வேறு பொது வைத்தியசாலைகள் உள்ளன. உங்களுக்கு விசேட கிளினிக் தேவைப்படாவிடின் முதற்படியாக உங்கள் வைத்தியர் இந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பார்.