நோய் ஏற்படல்

உளரீதியான பிரச்சினைகள்

எனக்கு உளரீதியான பிரச்சினைகள் இருப்பின் நான் என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் குடும்பங்களில், தனிப்பட்ட சூழலில் அல்லது தொழிலகத்தில் பிரச்சினையான சந்தர்ப்பங்கள் வருகின்றன. உளரீதியான நோய்கள் உதாரணமாக மன அழுத்தம் அதிக வேளைகளில் ஏற்படுகின்றது. ஒவ்வொரு மூன்றில் ஒரு நபரும் வாழ்வில் ஒருமுறையாவது இதனால் பாதிக்கப்படுகின்றார். பாதிக்கப்படுபவர் உதாரணமாக மீண்டும் மீண்டும் பயத்துடன் வாழ்வது அல்லது நீண்ட நாட்களுக்கு இழுபட்டுச் செல்லும் ஒரு கவலையால் துன்பப்படுகிறார். அதிக வேளைகளில் இப்படியான நிலைமையின்போது, நிபுணர்களின் உதவியின்றி இதிலிருந்து வெளிவருவது இயலாத விடயமாகும்.

 

உளரீதியான பாதிப்புக்கள் என்பது உண்மையில் ஒரு நோயாகும். இவற்றிற்கு சிகிச்சையளிக்க வேண்டும். உளவியல் வைத்தியர் அல்லது மனநோய் நிபுணர்கள் (மனித மனங்கள் = உள்ளம் குறித்து விசேடமாகக் கற்றுத் தேர்ந்த ஆண் மற்றும் பெண் வைத்தியர்கள்) இவ்வாறான வாழ்க்கை நிலையின்போது உங்களுக்கு ஆலோசனை வழங்கி உதவ முடியும். ஆண் மற்றும் பெண் உளவியல் நிபுணர்கள் நோயாளிகளுடன் சேர்ந்து கலந்துரையாடல் மூலம் அல்லது சிகிச்சையின் மூலம் புதிய வழிகளைத் தேடிக்கொள்வர். இவ்வாறாகவே இந்த நிலமையை சரிசெய்து கொள்ளலாம்.

 

உங்களுக்கு உதவி தேவைப்படின், முதலில் உங்கள் குடும்ப வைத்தியருடன் கதையுங்கள். அவர் உங்களை ஒரு துறைசார் நபரிடம் அனுப்பி வைப்பார். நீங்கள் ஒரு வைத்தியர் (உளவியல் வைத்தியர்) ஊடாகச் சென்றால் மட்டுமே மருத்துவக் காப்புறுதியின் அடிப்படைக் காப்புறுதி சிகிச்சைக்கான செலவைப் பொறுப்பேற்கும்.

 

அனைத்து ஆலோசகர்கள் மற்றும் உளவியல் துறைசார் நிபுணர்கள் இரகசியம் காப்பதற்கு கட்டாயமானவர்கள் மற்றும் உங்களைப் பற்றிய எவ்வித தகவல்களையும் வெளியே கூறமாட்டார்கள்.

க்ராவ்புண்டன் மனநோய்ச் சிகிச்சை சேவைகள்

உளவியல்ரீதியாக பிரச்னை உள்ள பெரியவர்களுக்கு உள்நோயாளி, பகுதியளவு உள்நோயாளி மற்றும் புறநோயாளித் துறைகளில் உள்ள உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கப்படுவதை க்ராவ்புண்டன் (Graubünden) உளவியல் சேவைகள் (PDGR) உறுதி செய்கிறது.

தொடர்பு

  • Psychiatrische Dienste Graubünden (PDGR)

    க்ராவ்புண்டன் Graubünden மனநோய்ச் சிகிச்சை சேவைகள்Loëstrasse 2207000 Chur058 225 25 25www.pdgr.ch

க்ராவ்புண்டன் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான மனநோய்ச் சிகிச்சை

குழந்தைகள் மற்றும் இளம் நபர்களுக்கான உளவியல் பராமரிப்புக்கு Kinder- und Jugendpsychiatrie Graubünden (kjp) பொறுப்பேற்கிறது.

தொடர்பு

  • Kinder- und Jugendpsychiatrie Graubünden (kjp)

    பிள்ளைகள்- மற்றும் இளையோருக்கான உளவளச்சேவைMasanserstrasse 147000 Chur081 252 90 23www.kjp-gr.ch