நோய் ஏற்படல்

குடும்ப பெண் வைத்தியர் / குடும்ப ஆண் வைத்தியர்

நான் ஒரு பெண் வைத்தியரை அல்லது ஆண் வைத்தியரை எவ்வாறு தேடிக்கொள்ளலாம்?

ஒரு குடும்ப ஆண் வைத்தியர் அல்லது ஒரு பெண் வைத்தியர் என்பவர் பொதுவான மருத்துவர் மற்றும் நீங்கள் நோயுற்றால் முதல் சிகிச்சை வழங்கலை மேற்கொள்வார். இவர்கள் முழு உடம்பிற்கும் பராமரிப்பு மற்றும் சிகிச்சையளிப்பதற்கு கற்றவர்கள். ஒரு குடும்ப வைத்தியர் நீங்கள் ஒழுங்காக அவரிடம் செல்வதால் உங்களை அறிந்திருப்பதுடன் திறமையாக ஆலோசனை வழங்குவார். இதனால் எப்பொழுதும் ஒரே வைத்தியரிடம் செல்வது சிறந்ததாகும்.

 

ஒரு குடும்ப வைத்தியரை வைத்திருப்பது, இலாபகரமானது: நீங்கள் நோயுற்றால், எந்த நேரத்திலும் குடும்ப வைத்திய நிலையத்திற்கு தொலைபேசியில் அழைத்து குறுகிய காலத்தில் ஒரு சந்திப்புக்கு நேரத்தைப் பெறலாம். அதிகமான மருத்துவக் காப்புறுதிகளில் நீங்கள் ஒரு குடும்ப வைத்தியரை வைத்திருந்தால் கட்டணம் மலிவாக இருக்கும்.

 

ஒரு பெண் வைத்தியரையோ அல்லது ஆண் வைத்தியரையோ தேடிக்கொள்வதற்கு பலவிதமான வழிகள் உள்ளன: உங்கள் நண்பர்கள்- மற்றும் தெரிந்தவர்கள் வட்டத்தில் கேட்டறியுங்கள், தொலைபேசிப் புத்தகத்தில் தேடுங்கள் அல்லது இணையத்தளத்தில் பாருங்கள்.