சிலவேளைகளில் மனிதர்களுக்கு ஒரு நெருக்கடி நிலையின்போது
உடனடியாக ஒரு ஆலோசனை உதவி தேவைப்படலாம். உடனடி
உதவியை Dargebotene Hand (கைகொடுக்கும் கை). எனும் அமைப்பு
வழங்குகின்றது. இவர்கள் தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது இணையத்
தொடர்பு (www.143.ch) ஊடாக ஆலோசனை வழங்குவர்.
இலக்கம் 143 ல் நெருக்கடியான வேளைகளின்போது தொடர்பு கொள்வதுடன்
ஒரு ஆண் அல்லது பெண் அலுவலகருடன் கதைத்துக்கொள்ளலாம்:
அவர்கள் நீங்கள் கூறுவதைக் கேட்பதுடன், மேற்படி என்ன செய்வது என்பது
குறித்து உதவி வழங்குவர். கைகொடுக்கும் கை எனும் இந்த அமைப்பு
அனைவருக்குமாக உள்ளதுடன் முழுவதுமாக அடையாளம் தெரியாமல்
இயங்குகின்றது.
இணையத்தளத்தில் விசேடமாக இளையோருக்கான ஆலோசனை உள்ளது.
மிகவும் பிரயோசனமான இணையத்தளம் உதாரணமாக www.lilli.ch. ஆகும்.
அவர்கள் மிக நம்பிக்கைக்கு உகந்த விதத்தில் இளையோர், இளம்
பெண்கள் மற்றும் ஆண்கள் விரும்பும் விடயங்களான: உதாரணத்திற்கு
உறவுகள், பாலியல் தொடர்புகள், கருத்தடை அல்லது வன்முறை குறித்து
தகவல்களை வழங்குகின்றனர். ஒருவர் சொந்தமாகக் கேள்விகளைக் கேட்கலாம்
அல்லது பிறர் எவற்றைக் கேட்கிறார்கள் என வாசித்துக் கொள்ளலாம்.
பிள்ளைகள் மற்றும் இளையோர், அவர்களுக்குக் கேள்விகள் இருந்தால்
அல்லது உதவி தேவைப்படின், தொலைபேசி மூலமாக இல. 147, SMS 147
அல்லது இணையத் தொடர்பு Chat 147 ஊடாக Pro Juventute வின் ஆலோசனை
நிலையத்தை தொடர்பு கொள்ளவும். இவ் வசதிகள் குறித்த
மேலதிக தகவல்களை இணையத்தளப் பக்கம் www.147.ch ல் காணலாம்.
சில பெற்றோர்கள் தமது பிள்ளையால் ஒரு நெருக்கடிக்கு அல்லது ஒரு
பாதிக்கும் நிலைமைக்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு பெற்றோருக்கான
அவசர அழைப்பு எனும் ஆலோசனை நிலையம் உள்ளது. அவர்களை
எந்த வேளையிலும் 0848 35 45 55 எனும் இலக்கத்தில் தொடர்பு
கொள்ளலாம். பெற்றோருக்கான அவசர அழைப்புடன் வளர்ப்பு ஆலோசனையை
பெறும் ஒரு சந்திப்பிற்கான நாளைத் தீர்மானிப்பதற்கும் வசதியுண்டு.
இணையத்தளம்: www.elternnotruf.ch இலும் நீங்கள் தகவல்களைக்
காணலாம்.