நோய் ஏற்படல்

பிள்ளைகளுக்கான வசதிகள்

எவ்விதமான வசதிகள் பிள்ளைகளுக்கு உள்ளன?

சுவிசில் தனியார் சிறுவர் ஆண், பெண் வைத்தியர்களோடு பாடசாலைப் பிள்ளைகளுக்கான விசேட இலவச வசதிகளும்; உள்ளன:

 

  • பாடசாலைக்கான உள்ளுராட்சி சபை ஒரு பாடசாலை வைத்திய-சேவையை வழங்குகின்றன: பாடசாலை ஆண் அல்லது பெண் வைத்தியர் பாடசாலைப் பிள்ளைகளை பாலர்பாடசாலையில், 4ம் மற்றும் 8ம் பாடசாலை வருடங்களில் பரிசோதிப்பதுடன் அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவார். இதனால் உடல்நலப் பிரச்சினைகள் இருப்பின் நேரகாலத்துடன் தெரிந்து கொள்வதுடன் சிகிச்சையும் பெறலாம்.
  • பாடசாலை பல் வைத்தியர் மற்றும் பாடசாலை பற்பராமரிப்பு: ஒரு ஆண் அல்லது பெண் பல் வைத்தியர் வருடத்துக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்வார். இதைவிடவும் ஒழுங்காக பற்பராமரிப்பு- சேவைக்காக வருகை தருவதுடன் பாடசாலைப் பிள்ளைகள் எவ்வாறு பற்களை கவனமாக மற்றும் சரியாகத் துப்பரவு செய்வது என்பது குறித்து கற்பிப்பர்.
  • பாடசாலை உளவியல் சேவை: இங்கு நீங்கள் பிள்ளைக்கு பாடசாலை விடயங்களில், உளவியல் மற்றும் வளர்ப்பில் பிரச்சினைகள் இருப்பின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
  •  

பிள்ளைகளின் அவசர வேளைகளுக்கான ஆலோசனைத் தொலைபேசி

Graubünden மாநில வைத்தியசாலையின் பிள்ளைகள் வைத்திய நிலையத்தில் பிள்ளைகளின் அவசர வேளைகளுக்கான ஒரு ஆலோசனைத் தொலைபேசி அழைப்பை ஒழுங்கு செய்துள்ளனர். பெற்றோருக்கு மருத்துவம் குறித்த கேள்விகள் இருப்பின் இலக்கம் 0900 25 66 11 ல் நிபுணத்துவமான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

 

இந்த ஆலோசனைத் தொலைபேசி நாளாந்தம் 24 மணித்தியாலமும் சேவையிலுள்ளது. வீட்டுத் தொலைபேசியிலிருந்து ஒரு தொலைபேசி ஆலோசனையைப் பெறுவற்கான கட்டணம் நிமிடத்திற்கு 3.23 பிராங் (தை 2019 ன் நிலை). உயிராபத்தான அவசர வேளைகளில் அவசர அழைப்பு இலக்கம் 144 அல்லது 112 ஐ அழைக்கவும்.