வயோதிபத்தில் உதவி

வயோதிபத்தில் உதவி

நான் வயோதிபராகி மற்றும் என்னால் தனியாக வாழ முடியாவிட்டால் யார் எனக்கு உதவுவார்கள்?

Spitalexterne Hilfe und Pflege (Spitex) எனும் ஒரு அமைப்பு (வைத்தியசாலைக்கு வெளியான உதவி மற்றும் பராமரிப்பு) தரமான உணவுச்-சேவையையும் ஒழுங்கு செய்கின்றது: முதியோர், நோயாளர் மற்றும் அங்கவீனமான நபர்களுக்கு நாளாந்தம் ஒரு சூடான மதிய உணவை வீட்டுக்கு வழங்குவார்கள். எந்த Spitex- அமைப்பு உங்கள் உள்ளுராட்சி சபையில் பொறுப்பு வகிக்கின்றது, எவ்விதமான வசதிகளை வழங்குகின்றது மற்றும் எப்படி அவர்களைத் தொடர்பு கொள்வது என்பதை, Graubünden Spitex-அமைப்பில் அறிந்து கொள்ளலாம்.

 

தொடர்பு

  • Spitex Verband Graubünden

    வைத்தியசாலைக்கு வெளியான உதவி மற்றும் பராமரிப்புRätusstrasse 227000 Chur081 252 77 22www.spitexgr.ch

Pro Senectute Graubünden

அத்துடன் Pro Senectute எனும் அமைப்பும் வயோதிபர்களுக்கான பல சேவைகளை வழங்குகின்றது. இதனால் நீங்கள் அதிக காலத்திற்கு வீட்டில் வாழ முடியும். Pro Senectute 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தனியாக மற்றும் வாழ்க்கைத் தராதரத்துடன் வாழ ஊக்குவிப்பதுடன் அதை நிறைவேற்றுகின்றது. வயோதிபர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இலவசமான மற்றும் நம்பிக்கையுடனான ஆலோசனைகளை பின்வரும் தேவைகளின்போது பெற்றுக்கொள்ளலாம்.

 

  • நிதிப் பிரச்சினைகள்
  • சட்டரீதியான விடயங்கள்
  • வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது
  • ஓய்வுநேரத்தை ஒழுங்கு செய்வது
  • வசிப்பது- மற்றும் உறவு குறித்த கேள்விகள்

 

சிலவேளைகளில் இந்த உதவி போதாமல் உங்களுக்கு முழு நாளும் உதவி தேவைப்படலாம். அப்படியானால் முதியோருக்கான நிலையம் அல்லது ஒரு வயோதிபர் இல்லம் உங்களுக்குப் பொருத்தமாக இருப்பதுடன் உங்கள் தேவைகளுக்கு அது சிறப்பாக அமையலாம். நீங்கள் எந்த வயோதிபர்- அல்லது பராமரிப்பு நிலையத்தில் வசிக்க வேண்டும் என்பது நீங்கள் வசிக்கும் இடத்தை பொறுத்தது. இது குறித்து Pro Senectute அல்லது உங்கள் குடும்ப வைத்தியர் விளக்கமான ஆலோசனைகனை வழங்குவார்கள்.

 

தொடர்பு

  • Beratungsstelle Pro Senectute Graubünden

    ஆலோசனை நிலையம் Pro Senectute GraubündenAlexanderstrasse 27000 Chur081 252 75 83www.gr.pro-senectute.ch