மனிதர்கள் பல வித்தியாசமான பொருட்களுக்கு அடிமையாகலாம்:
மதுசாரம் அல்லது சிகரட் அல்லது மருந்துகளுக்கு அதாவது நோவுக்கான-
நித்திரைக்கான- மற்றும் அமைதியாவதற்கான பொருட்கள். சிலவேளைகளில்
தொழில், உணவு, விளையாட்டு அல்லது கொள்வனவுக்கு அடிமையாவதும்
உண்டு. அல்லது சட்டபூர்வமற்ற போதைப் பொருட்களான கஞ்சா,
கொக்கெயின் அல்லது கெறோயின் போன்றவைகளுக்குமாகும்.
ஒன்றுக்கு அடிமையாதல் மற்றும் போதைப்பொருள் உடலுக்கும்
உளத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றன. போதைக்கு அடிமையாதல்
மிகநெருங்கி பழகும் மனிதர்களுக்கும் பிரச்சினையாக மாறலாம். குடும்ப
உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சிலவேளைகளில் நீண்ட காலத்திற்கு
அவர்களது அடிமைத்தனத்தை கவனித்திருக்க மாட்டார்கள். அப்படி அவர்கள்
கண்டுகொண்டாலும், அதுபற்றி அடிக்கடி அவர்கள் கதைத்துக் கொள்ள
மாட்டார்கள். ஆகவே, குடும்பத்திற்கு வெளியாக இருந்து துறைசார்
உதவியைப் பெறுவது முக்கியமானது.
பலவேளைகளில் போதைக்கு அடிமையான மனிதர்கள் அவர்களது
அடிமைத்தனத்திலிருந்து தனியாக வெளியே வரமாட்டார்கள்.
போதைக்கு அடிமையானவர்களுக்கான ஆலோசனையின்போது நீங்கள்
துறைசார் நபர்களுடன் சேர்ந்து ஒரு புதிய தீர்வைத் தேடலாம்.
இவ்வாறான பிரச்சினையான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர் மற்றும்
உறவினர்கள் உதவிகளைப் பெற்றுக்கொள்வார்கள்.
இந்த ஆலோசனை அதிகமாக இலவசமானது. துறைசார் நபர்கள் கட்டாயம்
இரகசியம் காப்பதற்கு உட்பட்டவர்கள். துறைசார் நபர்களது முகவரிகளை
தொலைபேசிப் புத்தகத்தில் நீங்கள் காணலாம். குடும்ப வைத்தியரும்
உங்களுக்கு துறைசார் நபரை சிபாரிசு செய்யலாம்.