நலமாக வாழ்வது

உடல்நிறைப் பிரச்சினை

உடல்நிறைப் பிரச்சினைக்கு நான் என்ன செய்யலாம்?

உங்கள் நிறை கூடுதலாகவோ அல்லது நிறை குறைவாகவோ உள்ளதா? அப்படியாக இருந்தால் நீங்கள் உங்கள் வழமையான உணவு முறையை மற்றும் உங்கள் வாழ்க்கை முறையை சோதித்துப் பார்க்க வேண்டும். அல்லது உங்கள் குடும்ப வைத்தியரிடம் ஆலோசனை பெறுங்கள். வைத்தியரின் இடத்திலோ அல்லது மருந்துச் சாலையிலோ நலமான உணவு மற்றும் நிறை கூடுதல் நிறை குறைதலுக்கான தகவல் கைநூல்கள் இருக்கும். சில மாநில வைத்தியசாலைகள் உணவு ஆலோசனைகளை வழங்குகின்றன. மருத்துவக் காப்புறுதி இவ்வித ஆலோசனைக்கான கட்டணங்களைப் பொறுப்பேற்குமா என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள். சுகாதாரமான உணவுக்குப் பக்கமாக போதுமான நடமாட்டமும் முக்கியமானது.

 

உடல் பருமனான பிள்ளைகள் மற்றும் இளையோருக்கு முழு சுவிசிலும் நிகழ்வுகள் உள்ளன. இந்த வகுப்புகள் உடல்நலமான நிறையை வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.