குறைவான நடமாட்டம் நோயை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக முதுகு
நோவு, நிறைகூடுதல் அல்லது இதய-குருதிச்சுற்று-நோய்கள் (உ-ம். மார்படைப்பு).
ஆகவே நீங்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை
மணித்தியாலமாவது சுறுசுறுப்பாக நடமாடிக்கொள்ளுங்கள். உதாரணமாக
விரைவாக நடப்பது, மிதிவண்டி ஓடுவது, நீந்துவது, ஓடுவது, தோட்ட-
அல்லது வீட்டு வேலை செய்வது. ஒருநாளில் இந்த 30 நிமிடங்களையும்
பிரித்து 3- தடவைகள் 10 நிமிடங்களாக செய்யலாம். ஆட்களைத்
தூக்கிச்செல்லும் லிப்ற் அல்லது ஓடும் படிகளில் செல்லாது படிகளில்
ஏறிச்செல்லுங்கள். இவ்வாறு நாளாந்தம் சுகாதாரமான நடமாட்டத்தைக்
கைக்கொள்ளலாம்.
மிகவும் முக்கியம்: பிள்ளைகளும் ஒருநாளில் குறைந்தது ஒரு
மணித்தியாலமாவது நடமாட வேண்டும். ஆகவே பாடசாலையில்
விளையாட்டு நேரம் முக்கியமானது. பிள்ளைகள் ஒரு
விளையாட்டுக் கழகத்தில் சேர்ந்திருந்தால் ஒழுங்காக உடற்பயிற்சியைப்
பெற்றுக்கொள்வர், உதாரணமாக ஒரு உதைபந்தாட்டக் கழகத்தில்.
சேர்ந்திருப்பது.