குடும்பத்தைத் திட்டமிடல்

பிறப்பின் பின்னரான உதவி

பிறப்பின் பின்னர் எங்கிருந்து நான் உதவிகளைப் பெறலாம்?

பிறப்பின் பின்னரான நாட்களில் உடல் மற்றும் உளரீதியாக தாய் ஓய்வெடுக்க வேண்டும். இந்த முதல் கிழமையில் (பிறப்பு வாரம்) தாயும் பிள்ளையும் மருத்துவரீதியாகப் பராமரிக்கப்படுவார்கள். மருத்துவக் காப்புறுதியின் அடிப்படைக் காப்புறுதி, கர்ப்பக் காலத்தின் போதான பரிசோதனைகள், பிறப்பு மற்றும் பிறப்பு வாரத்திலான பராமரிப்புப் போன்றவைகளின் செலவைப் பொறுப்பேற்கும். அத்துடன் பிறப்புத் தயார்படுத்தல் மற்றும் பாலுட்டும் ஆலோசனை போன்றவைகளின் செலவையும் மருத்துவக் காப்புறுதி பொறுப்பேற்கும்.

 

பிறப்பின் பின்னரான ஆரம்ப காலத்தில் வீட்டில் தாய்மார்-, தந்தைமார்-, மற்றும் பெற்றோர் ஆலோசனையாக உணவூட்டல், விருத்தியடைதல் அல்லது பிள்ளையின் வளர்ப்பு விடயங்களுக்காக உதவி வழங்கப்படும். உங்கள் உள்ளுராட்சி சபையிலோ அல்லது இணையத்தளத்திலோ Graubünden தாய்மார்- தந்தைமார் ஆலோசனை நிலையம் உங்கள் பிரதேசத்தில் வழங்கும் இப்படியான வசதிகள் குறித்து கேட்டறிந்து கொள்ளுங்கள். இது குறித்து கேள்விகள் இருப்பின் தொலைபேசி அல்லது இணையப் படிவத்தின் மூலமாக கேட்டறிந்து கொள்ளும் வசதியும் உள்ளது.

 

தொடர்புபடுத்தல்கள்