வங்கி- மற்றும் தபால் நிலையக் கணக்கு

வங்கி- மற்றும் தபால் நிலையக் கணக்கு

நான் எவ்வாறு ஒரு வங்கி- அல்லது தபால் நிலையக் கணக்கை ஆரம்பிப்பது?

எவராவது ஒரு வங்கியின் அல்லது தபால் நிலையத்தின் சேவைகளைப் பாவித்துக் கொள்ள விரும்பினால், அவர்களுக்கு ஒரு வங்கிக் கணக்குத் தேவைப்படும். வங்கிக் கணக்குகளைப் பொறுத்தவரை பல்வேறு விதங்களாகவும், வித்தியாசமான பாவனைகளுக்காகவும் வட்டிவீதங்களில் மற்றும் கட்டணங்களில் உள்ளன. கட்டணங்களைப் பொறுத்தவரை நீங்கள் குறைவான வங்கிக்; பற்றுச்சீட்டுக்கள் பெறுவது அல்லது இணைய வங்கித் தொடர்பை மேற்கொள்வதன் ஊடாக அதைக் குறைத்துக் கொள்ளலாம்.

 

ஒரு கணக்கைத் திறப்பதற்கு நீங்கள் தெரிவுசெய்த வங்கிக்கோ அல்லது தபால் நிலையத்திற்கோ சென்று முதலில் இது குறித்து ஒரு ஆலோசனை பெறவேண்டும். நீங்கள் வங்கிக் கணக்கு திறப்பதற்கு முடிவுசெய்தால் நீங்கள் உங்களை அடையாளப்படுத்த வேண்டும். ஆகவே கடவுச்சீட்டு மற்றும் வெளிநாட்டவர் அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள் - தேவைப்படின் ஒரு மொழிபெயர்ப்பாளரையும் கூட்டிச் செல்லுங்கள்.