சிறுகடன்கள்

சிறுகடன்கள்

சிறுகடன்கள் குறித்து நான் எதைத் தெரிந்திருக்க வேண்டும்?

நிதித் தட்டுப்பாடு இருக்கும்போது, ஒரு வாகனத்தை வாங்குவதற்கு அல்லது ஒரு விடுமுறைப் பயணத்தை மேற்கொள்வதற்கு, ஒரு சிறு கடனைப் பெற்றுக்கொள்வது கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால் கவனமாயிருங்கள்: சிறு அல்லது தனிப்பட்ட கடன்கள் பெறுமதி கூடியவை, வங்கிகள் இவற்றிற்கு 15 வீதம் வரையான வருட வட்டியைப் பெறலாம்.

 

சில சந்தர்ப்பங்களில், ஒரு சிறிய கடன், பிரச்சினையைத் தீர்த்து வைக்கக் கூடிய சிறப்பான வழியாக இருக்கலாம். இருப்பினும் தொடர்ந்து கடனுக்குப் பொருட்களை வாங்குவது பலமாக நிராகரிக்கப்படுகின்றது! இதனால் நீங்கள் உங்கள் வரவு செலவுப் பட்டியலை நீண்ட காலத்திற்கு பாதிப்படையச் செய்வதுடன், தற்சமயம் வேலை இழப்பீர்களானால் இது மேலும் பாதிப்புகளைக் கொண்டுவரும்.

 

சிறுகடன் வசதிகள் வித்தியாசமானவைகளாக உள்ளன. நீங்கள் முடிவு செய்யும் முன்பாக சரியாக ஒப்பிட்டுக் கொள்வது மற்றும் செலவுகளைக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். இதற்குப் பதிலானவற்றையும் பரிசீலியுங்கள்: ஒரு உறவினரிடம் அல்லது நண்பரிடம் கடன்பெறுவது மலிவாக இருக்கலாம். அல்லது முதலில் சேமித்த பின்பு ஒரு பொருளை வாங்கக் கூடிய நிலை வரும்போது அதை வாங்குவது போன்றவை. இதுவே மலிவானது மற்றும் மகிழ்வைத் தரக்கூடியது.