அவசர வேளை

அவசர வேளை

அவசர வேளை என்றால் என்ன மற்றும் அப்போது என்ன செய்ய வேண்டும்?

அவசரவேளை என்பது ஒரு உயிராபத்தான நிலைமையாகும். அதிகமான பொது வைத்திய நிலையங்களில் அவசர உதவிச்சேவைகள் உள்ளன, இது 24 மணி நேரமும் திறந்திருக்கும். ஆனால் இது மிகக் கடுமையான நிலைமையில் மட்டுமே பயன்படுத்தமுடியும்.

 

உங்களுக்கு அண்மையாக ஒரு மனிதர் அவசரதேவையில் இருந்தால் (உ-ம். ஒரு விபத்து), மிகவும் முக்கியமானது முதல் உதவி வழங்குவது. இதன்போது உயிர்வாழ்விற்கு முக்கியமான உடல் இயக்கம் அதாவது அறிவு, மூச்சு மற்றும் குருதிச் சுற்றோட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை, ஒரு பாடத்திட்டத்தில் கற்றுக்கொள்ளலாம்.

 

சுவிட்சர்லாந்துக்கான அவசரகால தொலைபேசி எண்கள்

 

வாரத்தின் அனைத்து நாளும் 24 மணிநேரமும் தொடர்புக் கொள்ளலாம்

 

  • காவல் துறை 117
  • தீயணைப்புப் படை (தீ, தண்ணீர், வாயு) 118
  • ஆம்புலன்ஸ் 144
  • அவசரகால தொலைபேசி எண் (காவல் துறை, தீயணைப்புப் படை, ஆம்புலன்ஸ்) 112
  • சுவிஸ் விமான மீட்பு (REGA; மீட்பு ஹெலிகாப்டர்) நஞ்சேற்றம் (நஞ்சியல் தகவல் மையம்) 1414
  • குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான தொலைபேசி உதவி 147

ஒரு அவசரகாலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நன்னடத்தைக் கோட்பாடு

  • அமைதியாக இருங்கள்
  • அந்த சூழ்நிலையை திறனாய்வு செய்யுங்கள்
    என்ன நடந்துள்ளது?
    யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர்?
  • அபாயத்தை அடையாளம் காணுங்கள்
  • உங்களை, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மற்றும் இதில் சம்பந்தப்பட்டுள்ள மற்ற தரப்பினர்களைப் பாதுகாத்திடுங்கள்
  • அவசரகால சேவைகளை அழையுங்கள் (144 அல்லது 112)
  • முதலுதவி அளியுங்கள்

அவசரகால மருத்துவ உதவி – அவசரகால தொலைபேசி எண் 144 அல்லது 112

உங்கள் அழைப்பை தகுதிபெற்ற டிஸ்பாச்சர் எடுப்பார். செய்தியைப் பொறுத்து, அவசியமான அனைத்து அவசரகால சேவைகளும் (ஆம்புலன்ஸ், மருத்துவர், மீட்பு ஹெலிகாப்டர், காவல் துறை மற்றும்/அல்லது தீயணைப்பு வீரர்கள்) உடனடியாக எச்சரிக்கப்படும்.

 

144 அல்லது 112 என்கிற தொலைபேசி எண்ணை பொது தொலைபேசிகள், ஃபிக்ஸட் லைன் மற்றும் மொபைல் இணைப்புகள் மூலம் இலவசமாகவும் ஏரியா கோடு உள்ளிடாமலும் அழைக்கலாம்.

 

அவசரகால சேவைகள் ஸ்விட்ச்போர்டிற்கு பின்வரும் தகவல்கள் அவசியமாகும்

 

  • உங்களைத் திரும்ப அழைக்க தேவைப்படும் நிகழ்வுகளில் உங்கள் பெயர் மற்றும் உங்கள் தொலைபேசி எண்.
  • என்ன நடந்தது என்பது பற்றிய சுருக்கமான விவரிப்பு.
  • விபத்து நடைபெற்ற இடம் பற்றிய துல்லியமான விவரங்கள்.
    இடம், தெரு, வீட்டு எண்.
  • எத்தனை நோயாளிகள் இருக்கின்றனர்.
  • நோயாளியின் நிலை: அவருக்கு நினைவு உள்ளதா? நோயாளி சுவாசிக்கிறாரா?
  • இந்த சம்பவம் எப்போது நடந்தது?

 

டிஸ்பாச்சர் உகந்த நடவடிக்கைகளைத் துவங்கிவிட்டார் என்று உறுதி செய்யும் வரை அழைப்பை முடித்துவிடாதீர்கள்.