கேள்விகள் மற்றும் பிரச்சினைகள் இருப்பின், அவை குறித்து நன்கு அறிந்து கொள்வதுடன் ஏற்கனவே இருக்கும் ஆலோசனை வசதிகளைப் பாவித்துக்கொள்வது உதவியாக இருக்கும். சில ஆலோசனை நிலையங்கள் பொதுவான கேள்விகளுக்கானவை, வேறுசில ஒரு குறிப்பிட்ட விடயத்திற்காக மற்றும் வாழ்க்கைப் பகுதிக்காக விசேட பயிற்சிபெற்றவை. இது குறித்து நீங்கள் ஒத்துழைத்து முன்னேற்றும் தகவல் நடு நிலையம் Chur, உங்கள் நகரசபை அல்லது இணையத்தளத்தில் இதற்குப் பொறுப்பான துறைசார்- மற்றும் ஆலோசனை நிலையங்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். ஒருசில ஆலோசனை நிலையங்களின் தொடர்புத் தரவுகளை நீங்கள் hallo.gr.ch எனும் இணையப் பக்கத்தின்
தனிப்பட்ட விடயப் பகுதியில் காணலாம்.