தொழில் ஒப்பந்தம்

தொழில் ஒப்பந்தம்

தொழில் ஒப்பந்தத்தில் எவை ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்?

தொழில் ஒப்பந்தம் தொழில் வழங்குனர் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை ஒழுங்குபடுத்தும். தொழிலாளர்கள் தீர்மானித்துக்கொள்ளப்பட்ட வேலையை செய்வதற்குக் கடமைப்பட்டுள்ளனர், அதேவேளை தொழில் வழங்குனர் ஊதியம் மற்றும் சமூகக் கொடுப்பனவுகளை செலுத்தவும் மற்றும் விடுமுறை வழங்கவும் கடமைப்பட்டுள்ளனர். தொழில் ஒப்பந்தத்தில் ஆகக் குறைந்தது இரு பகுதியினரின் பெயர்களும் (தொழில் வழங்குனர் மற்றும் ஆண் பெண் தொழிலாளர்கள்), ஒப்பந்தம் ஆரம்பிக்கும் திகதி, செய்யவேண்டிய வேலை மற்றும் வழங்கப்படும் ஊதியத; தொகை என்பன அடங்கியிருக்கும். இரு பகுதியினராலும் ஒப்பந்தம் மூலம் உறுதிப்படுத்தப்படாத வேறு சட்டங்கள்மற்றும் விதிகள், பெயர் குறிப்பிடும்படியாக சுவிஸ் கட்டாய சட்டவிதிகள் மற்றும் முழு தொழில் ஒப்பந்தங்கள் மூலமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்.