நியாயமற்ற முறையில் நடத்துதல்

நியாயமற்ற முறையில் நடத்துதல்

நியாயமற்றவாறு நடத்துவதாக நான் உணர்கின்றேன். நான் என்ன செய்யலாம்?

என்ன காரணத்திற்காக உங்கள் தொழிலில் நீங்கள் திருப்தியில்லாத நிலையில் உள்ளீர்கள் என்பதை நன்றாக யோசனை செய்யுங்கள். சிறப்பாக ஒவ்வொரு நிகழ்வுகள் குறித்தும் சிறுகுறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் அத்துடன் உங்களுக்கு சாட்சிகளை வைத்துக்கொள்ளுங்கள் (தொழிலக நண்பர்கள் அல்லது- நண்பிகள்). முதலில் வேலையிடத்தில் இருக்குமாயின், தொழிலாளர்களின் தனிப்பட்ட விடயங்களுக்குப் பொறுப்பான அமைப்பின் ஒரு உறுப்பினருடன் கதையுங்கள். எப்படியிருப்பினும் வேலையாட்டகளுக்குப் பொறுப்பான அலுவலகருடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளுங்கள்.

 

நீங்கள் சொந்தமாக அடுத்த அடி எடுப்பதற்கு முன்பாக துறைசார் நபர்களிடம் ஆலோசனையை மேற்கொள்ளுங்கள். சிறப்பாக ஒரு சட்ட ஆலோசனையை அல்லது ஒரு உதவிநிலையத்தில் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 

நீங்கள் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தால், நீங்கள் அங்கும் கேட்டுக்கொள்ளலாம். பல்கலாச்சார மத்தியஸ்தர் ஒருவரைத் தொடர்புகொள்வது மேலும் உதவுவதாக அமையலாம். அல்லது முதலில் நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் நண்பிகளிடம் இதுகுறித்து கதையுங்கள். சிலவேளைகளில் அவர்கள் வழங்கும் ஆலோசனைகள், மேலும் உதவிக்கொள்ளும்.