உங்கள் நண்பர்களுக்கு மற்றும் தெரிந்தவர்களுக்கு நீங்கள் தொழில் தேடுவதைத் தெரியப்படுத்துவது நன்மையை தரும். இதானல் சில வேளைகளில் நேரகாலத்துடன் ஒரு தொழிலிடம் வெற்றிடமாக வருவதை நீங்கள் அறிந்து கொள்வதுடன், அதற்காக விண்ணப்பிக்கலாம்.
பல தொழில்களுக்கு ஆட்கள் தேவை என பகிரங்கமாகவும் வெளியிடப்படுகின்றது. அவற்றை ஒருவர் நாளாந்த பத்திரிகைகளில், அதிகமாகக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெளிவரும் தொழில்வாய்ப்பு அறிவித்தல்களில் அத்துடன் பிரபலமான சஞ்சிகைகளில் அடிக்கடி தொழில் விளம்பரங்கள் வெளிவருவதைக் கண்டுகொள்ளலாம். தற்சமயம் நீங்கள் நாளாந்தப் பத்திரிகைகளை எடுக்கவில்லை என்றால், வாசிகசாலை அல்லது ஒரு கபேக்கு சென்றால், அங்கு நீங்கள் நாளாந்த- மற்றும் வாரப் பத்திரிகைகளை வாசிக்கலாம்.
வட்டார வேலை வாய்ப்பு மையங்களில் (RAV) வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரங்களைப் பார்வையிடலாம். நாளிதழ்கள், வட்டார அல்லது நகராட்சி அரசிதழ்கள், தற்காலிக வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் இணையதளங்களிலும் இவற்றைப் பார்க்கலாம். உதாரணமாக, பின்வரும் இணையதளங்களிலும் பார்க்கலாம்
தொழில்வாய்ப்புச் சந்தையில் எப்பொழுதும் இணையத்தளம் முக்கியமானதாகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பல வித்தியாசமான தொழில்வாய்ப்புப் பரிமாற்றங்கள் இணையத்தளத்தில் உள்ளன. ஒருபகுதியில் இவ்வகையான தொழில்தேடும் பகுதி இலவசமானது, ஒருபகுதிக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தித் தொழில்தேடுவதற்கு அதிகமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தேடுமாறு உத்தரவு வழங்கலாம். புதிய தொழில் வாய்ப்புக் கிடைத்தால் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறியத்தரப்படும்.
பல நிறுவனங்கள் தமது வெற்றிடத்தைத் தமது நிறுவன இணையத்தளத்தில் வெளியிடுவார்கள். நிறுவனங்களைப் பொறுத்தவரை நீங்கள் நேரடியாக அவர்களது இணையத்தளத்தில் பாருங்கள் அல்லது அவர்களுடன் தொலைபேசியில் கதையுங்கள். நீங்கள் இதையும் செய்யலாம், அதாவது அவர்கள் எவ்வித அறிவித்தலையும் கொடுக்காது விட்டாலும், நீங்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்ய விரும்பலாம். அதை முன்முயற்சி விண்ணப்பம் அல்லது திடீர் விண்ணப்பம் என அழைப்பர். மிகமுக்கியமான மற்றும் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய விண்ணப்பத்திற்கு நல்ல சந்தர்ப்பங்கள் உள்ளன. அதேவேளை விண்ணப்பப்படிவத்தில் அந்த நிறுவனத்தைப்பற்றி நன்கு அறிந்த என்றும் அங்கு வேலை செய்ய நல்ல விருப்பத்துடன் ஒரு தொழில்வாய்ப்பைத் தேடுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.