தொழில் தேடுவது

தொழில் விண்ணப்பம்

தொழில் விண்ணப்பம்

எழுத்து மூலமான விண்ணப்பம் என்பது ஒருவரின் சொந்த அறிமுக அட்டை போன்றது என்பதுடன் வழமையாகப் பின்வரும் பத்திரங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்:

 

  • சேர்த்து அனுப்பும் கடிதம்: அதில், நீங்கள் ஏன் இந்தத் தொழிலை விரும்புகின்றீர்கள் மற்றும் நீங்கள் ஏன் இதற்கு ஒரு நல்ல தெரிவு என விளங்கக்கூடியதாக எழுத வேண்டும். இந்தக் கடிதத்தில் நீங்கள் எதிர்காலத்தில் நிறுவனத்தின் குறிக்கோளுடன் சேர்ந்து செயற்பட விரும்புவதாகத் தொழில் வழங்குனருக்குத் தெரியப்படுத்த வேண்டும். நீங்கள் தொடர் கடிதங்களை எழுதாதீர்கள், மாறாக ஒரு விண்ணப்பத்திற்கு ஒரு கடிதம் போதுமானது.
  • வாழ்க்கைச் சரிதம் (ஊஏ) ஒருவர் தொழில் வழங்குனருக்கு தனது தனிப்பட்ட விடயங்கள், தனது தொழிற்கல்விப் பாதை மற்றும் மேலதிக உயர்கல்விகள், இதுவரையான தொழில் நிலைகள் மற்றும் அங்கு பெற்ற அனுபவங்கள், தனது மொழி- மற்றும் கணனி அறிவியல் விபரங்களைக் குறிப்பிட வேண்டும். ஒரு வாழ்க்கைச் சரிதம் எவ்வாறு இருக்க வேண்டும் மற்றும் எந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு பல்வேறு மாதிரிகள் உள்ளன. முதலில் சில உதாரணங்களை நீங்கள் இணையத்தளத்தில் பாருங்கள் அல்லது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.
  • சான்றிதழ்கள் மற்றும் தொழிற்கல்வி உறுதிப்படுத்தல்கள்: முக்கியமானது ஒரு இடைவெளி இல்லாத மற்றும் தொழில் செயற்பாடுகள் குறித்து வழங்கப்பட்ட நற்சான்றிதழ்களின் பதிவுகள். அத்துடன் நீங்கள் இறுதியாக நிறைவுசெய்த தொழிற்கல்வியின் சான்றிதழ் உறுதிப்படுத்தல் மற்றும் பொருத்தமான பிறகற்கைகள் குறித்து அத்தாட்சிப்படுத்துங்கள். அவதானம்: ஒருபோதும் அசல்களை அனுப்ப வேண்டாம், மாறகப் பிரதிகளையே அனுப்புங்கள்!