ஒவ்வொரு வேலைக்கும் ஒரு வெளி நாட்டில் பெற்ற சான்றிதழை அங்கீகரிக்கச் செய்ய வேண்டிய தேவை யில்லை. உங்கள் வேலை சுவிசில் சான்றிதழுடன் செய்யவேண்டும் என சட்டமாக்கப்பட்ட வேலையாக இல்லா விடின், நீங்கள் வெளிநாட்டு உயர் பட்டம் அல்லது வேலைச் சான்றிதழ்களை அங்கீகரிக்கச் செய்யாமல் தொழில் புரியலாம். நீங்கள் உங்களது தொழிலைச் செய்ய முடியும் என்பது, தொழில் சந்தையின் நிலையிலும் மற்றும் எதிர்காலத்தில் தொழில் வழங்குபவரின் எதிர்பார்ப்புகளிலும் தங்கியுள்ளது. சுவிசில் பெரும்பான்மையான தொழில்கள் சான்றிதழ்களுடன் செய்ய வேண்டும் என சட்டமாக்கப்படவில்லை.
நீங்கள் கற்றுக்கொண்ட தொழில் சுவிசில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் களுடன் செய்ய வேண்டிய வேலையாக இருப்பின், வெளிநாட்டு பட்டம் அல்லது தொழில் சான்றிதழை ஒரு சுவிஸ் திணைக்களத்தால் அல்லது நிறுவன த்தால் அங்கீகரிக்கச் செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களுடன் செய்ய வேண்டிய வேலைகள், அவை எவ்விதமான உயர் படிப்பு அல்லது சான்றிதழுடன் செய்ய வேண்டும் என்பது சட்ட ரீதியாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பட்டம்அங்கீகரிக்கச் செய்வது சுவிசில் வெளிநாட்டுச் சான்றிதழ்களை மற்றும் தொழில்களை அங்கீகரிக்கச் செய்யும் நிலையங்கள் பல உள்ளன. Staatssekretariats für Bildung, Forschung und Innovation SBFI ன் (கல்வி, ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு களுக்கான அரசசெயலரின்) இணைய த்தளப் பக்கத்தில் நீங்கள் இதற்குப் பொறுப்பான திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களைப் பார்வையிடலாம்.