தொழில் சான்றிதழ்கள்

தொழில் சான்றிதழ்கள்

தொழில் சான்றிதழ்கள்

நீங்கள் தொழில் உலகில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றிருந்தபோதும், இதுவரை ஒரு தொழில் தகமைச் சான்றிதழையும் பெறாதிருந்தால், நீங்கள் உங்களது முன்னைய தொழில் சான்றிதழை, தொழில் தகுதியை ஏற்றுக் கொள்ளச்செய்வது என்று அழைக்கப் படும் முறை மூலம் அங்கீகரிக்கச் செய்யலாம். அல்லது நீங்கள் ஒரு தொழில் தகமைச் சான்றிதழை 2வது கற்கும் வழி என்பதன் மூலம் மீளவும் பெற்றுக் கொள்ள முடியும்.

 

கற்றுக் கொண்ட திறமைகளை ஏற்றுக்கொள்ளச் செய்வது என்பதன் அர்த்தம், நீங்கள் இதுவரை அறிந்திரு ப்பது மற்றும் அனுபவங்களை ஒரு குறிப்பிட்ட தொழில் துறையில் பதிவு செய்திருப்பதுடன் அவற்றை பரிசீல னை செய்வதாகும், இதற்காக நீங்கள் குறைந்தது ஐந்து வருடங்கள் உங்கள் தொழிலில் அனுபவங்களைச் சேகரித் திருத்தல் அவசியமாகும். அதன்பின் நீங்கள் இந்த அனுபவங்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதுடன் மத்திய அரச திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகமைச் சான்றிதழைப் பெறமுடியும்.

 

இதன்மூலம் உங்கள் தொழில் அறிவை அடையாளப்படுத்தி, ஆராய்ந்து உங்கள் கோவையில் பதிவு செய்வர். தொழில் வளத் துறைசார் நபர்கள் உங்கள் கோ வை குறித்து தமது முடிவை வழங்கு வர். விரும்பும் தொழிலில் தன்நம்பிக் கையும் விரும்பும் தொழில் சான்றிதழு க்காகத் தேவைப்படும் எதிர்பார்ப்புகளும் நிறைவாக இருந்தால், உங்களுக்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்படும். தற் சமயம் போதாதிருந்தால், தேவைப்படும் கற்கைநெறிகளின் மூலம் ஈடுசெய்து கொள்ள முடியும்.

 

2வது கற்கை வழி மூலமான தொழிற்கல்வி

ஒரு வயதுவந்த நபர் ஒரு தொழிற்கல்வியை 2வது கற்கைவழி மூலமாகவும் மீளக கற்றுக்கொள்ள முடியும். இதற்கு ஆகக் குறைந்தது உங்களுக்கு தொழில் உலகில் ஒரு குறிப்பிட்ட தொழில் பகுதியில் ஐந்து வருட அனுபவம் இருக்க வேண்டும். இருப்பினும் இதற்காக நீங்கள் மேலும் ஒரு தொழிற்கல்வித் திட்டத்தின் தொழில் விதிகள் மற்றும் பொதுவான கற்கைநெறிகளைக் கற்க வேண்டும், உதாரணமாக ஒரு தொழில் கல்லூரி யில். மேலும் விரிவுபடுத்தப்பட்ட பாடத்திட்டங்களில் அதாவது வர்த்தகத் துறை போன்ற கல்வியின்போது வயது வந்தோருக்கான விசேட வகுப்புகள் உள்ளன. இதைவிடவும்: சுவிசில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வயதுவந்தோர்அவர்களுக்குப் பொருத்தமான தயார்படுத்தல்களை மேற்கொள்வதுடன் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் பரீட்சை யில் தோன்றி தகமைச் சான்றிதழ் களைப் பெற்றுக்கொள்கின்றனர்.