தொழில் அனுமதி

தொழில் அனுமதி

யார் ஒரு தொழில் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுவார்?

சுவிசில் அடிப்படையாக இரண்டு கொள்- கைகள் உள்ளன: EU-/EFTA- நாடுகளிலி ருந்து வந்துள்ள தொழிலாளர்கள், தொ ழிற் சந்தையில் நுழைந்து கொள்வது இலகுவாக இருக்கும். இதற்கான காரணம், சுவிஸ் நாட்டிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU).இடையே செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்ந்தமாகும்.

 

வேறு அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் அவரசமாகத் தேவைப்பட்டால், மற்றும் மிகவும் சிறந்த தராதரம் உள்ள வேலை யாட்களாக இருப்பின், அவர்களுக்கு மட்டும் தொழில் அனுமதிவழங்கப்படும்.

 

குடிவரவு அமைச்சு செயலரின் இணையத்தளப் பக்கத்தில், ஒரு அனுமதியைப் பெறுவதற்கு எவ்விதமான நிபந்தனைகள் தேவைப் படுகின்றன என்பதை வாசித்து அறிந்து கொள்ளலாம். இந்தத் தகவல்கள் டொச் பிரெஞ்சு, இத்தாலியம் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளன.

 

நீங்கள் வசிக்கும் மாநிலம், மேலே குறிப்பிட்டுள்ள தரவுகளின்படி, உங்களுக்கு ஒரு தொழில் அனுமதி வழங்கலாமா என்பதை முடிவு செய்யும். மேலதிக தகவல்களை நீங்கள் Amt für Migration und Zivilrecht Graubünden (குடிவரவு மற்றும் சிவில் உரிமைத் திணைக்களம் Graubünden) ல் பெற்றுக்கொள்ளலாம்.