அரசியல்

அமைவு

சுவிஸ் நாடு எவ்வாறு அமைந்துள்ளது?

1291ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி, யூரி, ஸ்விஸ் (Schwyz) மற்றும் அன்ட்டர்வால்டன் (Unterwalden) ஆகிய பள்ளத்தாக்கு நகராட்சிகள் இணைந்த ‘பழைய கூட்டமைப்பு’ நிறுவப்பட்டது.

 

இந்த சுவிஸ் நாடு நாகரீகம் அடைவதற்கான அடிப்படை 1848 ம் ஆண்டுக்கு இட்டுச் செல்கின்றது. அந்நாளில் பெரும்பான்மையான மாநிலங்கள் புதுவிதமான மத்திய அரசை ஏற்படுத்தி, அதற்கு ஒரு மத்திய சட்டவாக்கத்தை (நாட்டின் அடிப்படைச் சட்டவரைபு) ஏற்றுக்கொண்டனர். இதில் வேறு விடயங்களுடன், பல பகுதிகளான இராணுவம், சுங்கம் அல்லது தபால்- மற்றும் நாணய விடயம் மத்திய அரச விடயமாக மற்றும் ஒரேவிதமானவையாக இருக்க ஒழுங்கு செய்ததுடன், அதேவேளை மாநிலத்தின் சுயாட்சி சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சுவிஸ் எப்போது தனது தேசிய விடுமுறை தினத்தைக் கொண்டாடுகின்றது?

ஆவணி 1. இந்த நாளில் மூன்று பழைய மாநிலங்கள் Rütli எனும் இடத்தில் கூட்டரசை உறுதிப்படுத்தினார்கள், இதுவே வழக்கமானது. சுவிசின் பல நகரங்களில் தேசிய விடுமுறைதினம் விழா ஊர்திகள், உரைகள் மற்றும் வானவேடிக்கையுடன் கொண்டாடப்படும்.