பாடசாலை

பெற்றோரின் பொறுப்பு

பெற்றோரின் பொறுப்பு

குழந்தைகளை வளர்ப்பது மற்றும் அவர்களுக்கு கல்வியறிவு கொடுப்பது பெற்றோரின் பொறுப்பாகும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, அவர்கள் பள்ளிக்கு தவறாமல் வருவதை உறுதி செய்வது, அட்டவணை மற்றும் பள்ளியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பது ஆகியவற்றை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகள் வீட்டுப்பாடங்களை தவறாமல் செய்து முடிப்பது, அவ்வாறு செய்து முடிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதையும் பெற்றோர் உறுதி செய்தல் அவசியம். சுவிட்சர்லாந்தில் பெற்றோர் மற்றும் பள்ளிக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது. பெற்றோர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் மாலை நேரக் கூட்டத்துக்கு வருமாறு பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுக்கும். பெற்றோர் மற்றும் குழந்தைகள் இவற்றில் பங்கேற்பது பள்ளியில் எழும் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைக் காண மிகவும் அவசியமாகும் அத்துடன் குழந்தைக்கான எதிர்காலத் தொழில் தேர்வு குறித்து முடிவு செய்யவும் இது உதவும்.