மருத்துவக் காப்புறுதி

தொழில் செய்ய இயலாதவர்களுக்கான காப்புறுதி

தொழில் செய்ய இயலாதவர்களுக்கான காப்புறுதி (IV) எதற்காக உள்ளது?

IV எனும் சுருக்கப் பெயர் தொழில் செய்ய இயலாதவர்களுக்கான காப்புறுதி என்பதைக் குறிக்கின்றது. இது சுவிசில் AHV வுடன் மேலதிகமான ஒரு முக்கிய சமூகக் காப்புறுதியாகும். ஒருவர் அல்லது ஒருத்திக்கு உடல் ரீதியான, உள ரீதியான அல்லது மூளை ரீதியான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு அல்லது நீண்ட காலத்திற்கு (குறைந்தது ஒரு வருடத்திற்கு) தொழில் செய்ய முடியாது போனால் தொழில் செய்ய இயலாதவர் எனக் கருதப்படுவர்.

 

IV ன் முதற்படியான செயற்பாடு, பாதிப்படைந்த காப்பறுதி செய்திருந்த நபரை மீண்டும் தொழில் உலகிற்கு திரும்பச் செய்வதாகும். இதற்காக பல்வேறு நலப்படுத்தி மீள அழைத்துவரும் நடவடிக்கைகள் உள்ளன. இவை அனைத்தும் நோக்கத்தை நிறைவேற்றாவிடின், காப்புறுதி செய்திருந்த நபருக்கு IV ஓய்வூதியத்தை வழங்கும்.

தொடர்பு

  • Sozialversicherungsanstalt des Kantons Graubünden

    க்ராவ்புண்டன் Graubünden மாகாணத்தின் சமூகக் காப்பீட்டு நிறுவனம்Ottostrasse 247000 Chur081 257 41 11www.sva.gr.ch