குடும்பத்தைத் திட்டமிடல்

வழமையான தயார்படுத்தல்

எவ்விதமான வழமையான தயார்படுத்தல்கள் பிறப்பிற்கு முன்பாக செய்ய வேண்டும்?

உங்கள் குடும்பப் பதிவுப்புத்தகம் மற்றும் உள்ளுராட்சி சபை பதிவுப் பத்திரத்தையும் ஆயத்தமாக வைத்திருங்கள். பிள்ளையை குடிமக்கள் பதிவு அலுவலகத்தில் பதிவதற்கு வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இவை தேவைப்படும்.

 

பிறப்பிற்கு முந்திய இறுதிக் கிழமையே பிள்ளையின் முதற் பெயரைத் தெரிவுசெய்வதற்கான ஆக இறுதியான காலம். பிள்ளையின் பெயரை நீங்கள் ஏற்கனவே தெரிந்திருக்கின்றீர்கள் என்பதை வைத்தியசாலை எதிர்பார்க்கின்றது.

 

பிறக்கும் முன்பாகவே உங்கள் குழந்தையை மருத்துவக் காப்புறுதியில் பதிவு செய்யுங்கள். இதனூடாக நீங்கள் உடல்நலக் கேள்விப்படிவத்தை நிரப்ப வேண்டிய தேவை இருக்காது, அத்துடன் உங்கள் பிள்ளைக்கு நீங்கள் முன்பாகவே கட்டணம் செலுத்த வேண்டிய தேவையும் இருக்காது.

 

தற்சமயம் பெற்றோர் திருமணமாகியிருக்காவிட்டால், தகப்பன் பிள்ளையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, அவர் குடிமக்கள் பதிவுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக தந்தையாகப் பதிவை மேற்கொள்ள வேண்டும். திருமணமாகாத பெற்றோர்கள் பிறப்பிற்குப் பின்பாக விளக்கம் அறிந்து கொள்ளும் திணைக்களத்தால் தொடர்பு கொள்ளப்படுவார்கள். அவர்கள்,பிள்ளைக்கான பராமரிப்புச் செலவு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்வார்கள்.