சுத்தம் செய்தல், குழந்தைப் பராமரிப்பு, வீட்டுவேலை மற்றும் தோட்டவேலை செய்து சம்பாதிப்பதும் வேலைவாய்ப்பாகவே கருதப்படும். இதற்கு முதலாவதாக சம்பந்தப்பட்ட காவல்துறை பிரிவால் வழங்கப்படும் அனுமதி ஒன்றை வைத்திருக்க வேண்டும். இரண்டாவதாக சமூகப் பாதுகாப்பு அதிகாரிகளால் அல்லது தனிப்பட்ட முறையில் முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படிப் பதிவு செய்யாவிட்டால், நீங்கள் செய்வது சட்டவிரோத வேலையாகக் கருதப்படும். வேலையிழப்பு, விபத்து, தகுதிநீக்கம் நேரிடும்போது சம்பந்தப்பட்ட நபர் காப்பீடு பெற முடியாது.