சுவிஸ்

சமத்துவம்

சுவிசில் ஆண் மற்றும் பெண்ணுக்கு சமத்துவம் வழங்கப்படுகின்றதா?

1981 தொடக்கம் ஆண் மற்றும் பெண் சம உரிமையுடையவர்களாக சுவிஸ் சட்டவாக்கத்தில் உறுதிசெய்யப்பட்டது. 1988ல் ஒரு மத்திய அரச அலுவலகம் ஆண் பெண் சமத்துவத்தைப் பேணுவதற்காக நிறுவப்பட்டது. 1996 தொடக்கம் சமத்துவச் சட்டம் அமுலுக்கு வந்ததுடன், அது விசேடமாக ஊதியம் பெறும் தொழில் ரீதியான எவ்வித ஒதுக்குதல்களையும் தடைசெய்கின்றது. இந்த ஒதுக்குதல் தடை தொழில் வாழ்வில் அனைத்துப் பகுதிகளிலும் செல்லுபடியாகும்: வேலைக்கு அமர்த்துதல், ஊதியம், ஊக்குவித்தல், மேற்கல்வி அல்லது விலக்குதல் போன்றவை. இவை போன்று ஒருவருடைய சொந்த நிலை, குடும்ப நிலமை அல்லது கர்ப்பமுற்றிருப்பது போன்றவைகளால் ஒதுக்கப்படுதலுக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.

 

சமத்துவம் என்பது சட்டரீதியாக சம சந்தர்ப்பங்களை வழங்குவதோடு அத்துடன் சமூக அல்லது கலாச்சாரப் பார்வையில் சமத்துவமற்று நடப்பதைக் கவனத்தில் எடுக்கின்றது. இந்தச் சொல் குறிப்பிட்ட செயற்பாடுகளை சமமாக இரு பாலாருக்கும் இடையே பகிர்ந்து கொள்வதைக் குறிப்பிடுகின்றது. சமத்துவச் சட்டம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒதுக்கப்படுவதற்கு எதிராகக் குரல்கொடுக்க சந்தர்ப்பம் வழங்குகின்றது – குடும்பத்தில், தொழிலில் அல்லது தொழிலிடத்தில் பாலியல் தொந்தரவின்போது பாவிக்கப்படும்.

 

அத்துடன் சுவிஸ் நாட்டு தம்பதிகளுக்கான சட்டம் 1988ல் ஆணுக்கும் பெண்ணுக்குமான சமத்துவ அடிப்படைச் சட்டரீதியில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சட்டப்படி தம்பதிகளில் ஒருவர், வீட்டுவேலைகளைச் செய்பவராக இருந்தால், பிள்ளைகளைப் பராமரிப்பவராகவோ அல்லது மற்றவரின் தொழிலிலோ அல்லது செயற்பாடுகளிலோ உதவி செய்பவராக இருந்தால், மற்றவரின் ஊதியத்திலிருந்தோ அல்லது சொத்துகளிலிருந்தோ «ஒரு குறிப்பிட்ட தொகையை அவருடைய விருப்பத்தின்படி செலவு செய்ய அனுமதியுண்டு».