அரசியல்

மக்கள் உரிமைகள்

எவை மிக முக்கியமான மக்கள் உரிமைகள்?

சுவிசில் ஆண் மற்றும் பெண் குடிமக்கள், அரசியலில் உத்வேகத்துடன் சேர்ந்து செயற்படுவதற்குப் பல்வேறு சந்தர்ப்பங்கள் உள்ளன. இது ஆகக் குறைந்தது 18 வயதானவர்கள் மற்றும் தமக்காக சட்ட வாக்குறுதி வழங்கக்கூடியவர்கள் மற்றும் சுவிஸ் பிரஜாவுரிமை உடைய அனைத்து நபர்களுக்கும் பொருந்தும். மிகமுக்கியமான மக்கள் உரிமைகள் கீழே சுருக்கமாகத் தரப்படுகின்றது.

 

  • தேர்தல் உரிமை: நாடாளுமன்றுக்கு ஒவ்வொரு நான்கு வருட மும் ஆண் மற்றும் பெண் குடிமக்கள் தமது மக்கள் பிரதிநிதி களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்கள் மாநிலத்தின் சபை உறுப்பினர்களை மற்றும் நகர உறுப்பினர்களையும் தேர்வு செய்வார்கள். மாநில அரசைப் பொறுத்தவரை அது மக்களால் தெரிவு செய்யப்படுவதில்லை மாறாக தேசிய நாடாளுமன்றால் தெரிவு செய்யப்படுகின்றது.
  • வாக்குரிமை: மக்கள் வாக்கெடுப்புக்களின்போது வாக்குரிமையு டையவர்கள் வருடத்தில் பல தடவைகள் விடயங்களுக்கான கேள்விகளுக்கு அல்லது –உள்ளுர் மாநில அல்லது மத்திய அரச சட்டங்களுக்கு வாக்களித்து முடிவு செய்வார்கள். சிறிய நகரங்களில் நகர ஒன்றுகூடல் உள்ளது: ஆண் மற்றும் பெண் குடிமக்கள் அவர்கள் தமது நகரில் ஒன்றுகூடி உள்ளுர் விடயங்கள் குறித்து கலந்துரையாடி அது குறித்து முடிவெடுப்பர்.
  • ஒன்றுசேர்ந்து முடிவெடுக்கும்- மற்றும் சர்வஜன வாக்கெடுப்புக்கான உரிமை: ஒரு ஆட்சேபனையை ஒன்றுசேர்ந்து முடிவெடுப் பதன் மூலம் மத்திய சட்டவாக்கத்தில் மாற்றங்களைக் கோருவதற்கு ஆண் மற்றும் பெண் குடிமக்களுக்கு சந்தர்ப்பமுள்ளது. அத்துடன் அவர்கள் சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்தலாம் அதாவது நாடாளுமன்றம் எடுத்த தீர்மானத்தை, பின்பு மக்கள் முடிவிற்காக விடப்படுவதாகும். இதன்படி ஒரு ஒன்றுசேர்ந்து முடிவெடுப்பதை அல்லது சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய வாக்குரிமையுடையோர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு முன்பாகத் தமது கையொப்பத்தை இட்டு கோரிக்கை விடுக்க வேண்டும். அதாவது மக்களின் வாக்களிப்பிலேயே இறுதி முடிவு தங்கியுள்ளது.
  • ஆட்சேபனை உரிமை: அனைத்து நபர்களுக்கும்- அதாவது ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்களுக்கும்-, எழுத்துமூலமாகத் தயா ரிக்கப்பட்ட வேண்டுகோள்கள் கவன ஈர்ப்புகள் மற்றும் குறைகளை திணைக்களங்களுக்குத் தெரிவிப்பதற்கு அனுமதியுண்டு. இருப்பினும் இந்த ஆட்சேபனைக்கு அவர்கள் எதையாவது செய்யவேண்டுமென்ற கடமையில்லை. ஆனால் இந்த விடயம் குறித்துத் திணைக்களம் ஆகக் குறைந்தது தெரிந்து கொள்ளவேண்டும்.