பிரஜாவுரிமை

பிரஜாவுரிமை

பிரஜாவுரிமை பெறுவதற்கான தகவல்களை நான் எங்கு பெறலாம்?

சுவிசில் ஆண் மற்றும் பெண் வெளிநாட்டவர்கள் சுவிஸ் பிரஜாவுரிமையைக் கோருவதற்கு சந்தர்ப்பமுள்ளது. இருப்பினும் இது தானாகவே நடைபெறாது என்பதுடன் மத்திய மாநில மற்றும் வசிக்கும் உள்ளுராட்சிசபையில் பல வித்தியாசமான நிபந்தனைகளை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

 

வழமையான பிரஜாவுரிமை நடைமுறை என்பதில் உள்ளுராட்சிசபை மாநிலம் மற்றும் மத்திய அரசு பங்கெடுத்துக் கொள்ளும். அதாவது பிரஜாவுரிமை நடைமுறை மூன்று படிகளைக் கொண்டது. இதில் எவ்வித நிபந்தனைகள் உள்ளன மற்றும் இந்த நடைமுறை எவ்வாறு இடம்பெறும் என்பது குறித்து உங்கள் உள்ளுராட்சிசபையிலோ அல்லது Graubünden குடிவரவாளர் கள் மற்றும் சிவில் உரிமைத் திணைக்களத்திலோ கேட்டறிந்து கொள்ளுங்கள். இதற்கு முயற்சிப்பதற்குத் தேவையான விண்ணப்பப் படிவங் களை நிரப்பி Amt für Migration und Zivilrecht ல் (குடிவரவாளர்கள் மற்றும் சிவில் உரிமைத் திணைக்களம்) ஒப்படைக்க வேண்டும்.

 

சுவிசில் இலகுவான பிரஜாவுரிமை என்பதும் உள்ளது. இது குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அதாவது ஒரு சுவிஸ் பிரஜையின் வெளிநாட்டுக் கணவன் அல்லது மனைவி அதேபோன்று ஒரு சுவிஸ் பெற்றோர் பகுதியின் பிள்ளைகள் அவர்கள் இதுவரை பிரஜாவுரிமை பெறாது இருந்தால் செல்லுபடியாகும். இதற்குத் தனியாக மத்திய அரசே பொறுப்பு வகிக்கும். ஆகவே இதற்கு முயற்சிப்பதற்கு நேரடியாக Staatssekretariat für Migration இடம் (குடிவரவாளர்களுக்கான அரச செயலர்) விண்ணப்பிக்க வேண்டும்.