பாடசாலைப் பிள்ளைகளின் உதவி

வீட்டுப்பாடம்

எனது பிள்ளையின் வீட்டுப்பாடங்களில் யார் உதவுவர்?

ஆசிரியை அல்லது ஆசிரியர் மாணவ மாணவிகளுக்கு வீட்டுப்பாடங் களை வழங்குவர். இந்த வீட்டுப்பாடத்தை பிள்ளைகள் வீட்டில் தனி யாக செய்ய வேண்டும். நல்ல சூழமைவை அமைத்துக் கொள்வதன் மூலம் பெற்றோர் பிள்ளைகளுக்கு உதவ முடியும். இயலுமானவரை வீட்டுப்பாடத்தை ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் மற்றும் அதே இடத்தில் செய்வதுடன் அதன்போது எவ்வித தடைகளும் இல்லாதிருப்பது மிக உதவியாக இருக்கும், ஆகவே இந்த வேளைகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சியை நிறுத்தி விடுங்கள். சிலவேளைகளில் உங்கள் பிள்ளை தனது சக மாணவ மாணவியர்களுடன் சேர்ந்து தனது வீட்டுப்பாடத்தைச் செய்யலாம். ஒன்று சேர்ந்து கற்பது அதிக வேளைகளில் மிக அதிக மகிழ்வைத் தருகின்றது.

 

சில உள்ளுராட்சிசபைகள் மற்றும் பாடசாலைகள் பாடசாலை நேரத்தின் பின் ஒரு பராமரிப்புடனான வீட்டுப்பாட உதவியை வழங்குகின்றன. அங்கு பிள்ளை தனது வீட்டுப்பாடங்களை பராமரிப்பு நபரின் கண்காணிப்பின் கீழே செய்யலாம். அத்துடன் சில கழகங்கள் மற்றும் அமைப்புகள் குறைவான கட்டணத்தில் கற்பிக்கும் திட்டங்களைச் செயற்படுத்துவார்கள். இவை பயிற்றப்பட்ட ஆசிரியை மற்றும் ஆசிரியர்களினால் வழி நடத்தப்படும் அத்துடன் தனிப்பட்ட நபர்களால் நடத்தப்படும் வீட்டுப் பாட உதவிவசதிகளும் உள்ளன.