நடுத்தரப் பாடசாலை

சேர்வது

நடுத்தரப் பாடசாலையில் ஒருவர் எவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படுவார்?

மாணவர்கள் மற்றும் மாணவிகள் திறமையான பெறுபேறுகள் பெற்றால் 8. அல்லது 9. வது பாடசாலை வருடத்தில் மாநிலப் பாடசாலை அல்லது உயர்கல்லூரி செல்வதற்கான பரீட்சையில் தோற்றலாம். உயர்தரத்தில் இருக்கும்போது மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு உரிய காலத்தில் அறிவிக்கப்படுவதுடன் அவர்கள் சொந்த விருப்பத்தில் இதற்கான கற்கைநெறிகளைப் பெற்றுக்கொள்வர். அத்துடன் இன்னுமொரு வசதியாக, ஆரம்பப்பள்ளி 6ம் வகுப்பிலிருந்து நேரடியாக நடுத்தரப் பாடசாலைக்குச் செல்வதாகும். இதற்காகவும் ஒரு பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். 6ம் வகுப்பிலிருந்து மேலே சென்ற பிள்ளைகளுக்கு, மாநிலப் பாடசாலையின் முதல் மூன்று வருடங்களும் கட்டாய பாடசாலைக் காலத்தின் பகுதிகளாகக் கணிக்கப்படும்.