வித்தியாசமான கலாச்சாரம்

வித்தியாசமான கலாச்சாரம்

எவ்வாறு ஒரு பிள்ளை வித்தியாசமான கலாச்சாரங்களுக்கு இடையில் தனது வழியைக் கண்டுகொள்ளும்?

ஒரு பிள்ளை எங்கு வளர்ந்தாலும், பல சூழ்நிலையில் வளர்ப்புமுறை ஒரேமாதிரியாவே இருக்கின்றன, இருப்பினும் வளர்ப்பு முறை- சமூகச் சூழமைவுகள், கலாச்சாரம் அல்லது மதப் பெறுமானங்கள் போன்றவைகளிலும் தங்கியுள்ளது. இங்கு குடியேறியுள்ளவர்களின் பிள்ளைகள் இரு வாழ்க்கை உலகில் சமகாலத்தில் வாழ வேண்டியுள்ளனர்: பெற்றோரின் உலகு மற்றும் சுவிஸ் நாடு. மொழி, மதிப்பீடுகளை மதித்தல் மற்றும் ஒன்றுசேர்ந்து வாழ்வதிலான விதிகள் வித்தியாசப்படுகின்றன. இவை பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்: எந்த உலக வாழ்க்கை எனக்கு இப்போது உரித்தானது? பிள்ளைகள் அங்கும் இங்குமாக அலைக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் இந்த இரண்டு உலகையும் ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு பெரிய சாதனை.

 

பெற்றோர் மற்றும் உதாரணமாக பாடசாலை இதற்கு உதவி செய்ய முடியும். நீங்கள் பிள்ளளைகளுக்கு உதவியாக இருக்கவேண்டும். அவர்கள் சுவிசின் மதிப்பீடுகளுக்கும் குடும்பத்தின் மதிப்பீடுகளுக்கும் இடையே ஒரு சமநிலையை அடைவதற்கு உதவிசெய்ய வேண்டும். இதிலிருந்து பெற்றோர்கள் விளங்கிகொள்ள வேண்டியது என்வென்றால், அவர்கள் சுவிசின் தனித்துவ தன்மையை ஏற்றுக்கொள்வது என்பதாகும். அதேவேளை உதாரணமாகப் பாடசாலை, குடியேறி வந்துள்ள பெற்றோரது வாழ்க்கை உலகை கற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துகின்றது.