வரிகள்

வரிகள்

சுவிசில் எந்த வகையான வரிகள் உள்ளன?

சுவிசில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் தொழில் செய்தால் அல்லது பொருட்களை வாங்கினால் வரி செலுத்தும் கடமையுண்டு. வரி என்பது ஒரு பொது வாழ்வுக் கொடுப்பனவு. இது நாட்டின் முக்கிய வருமான ஊற்றாக இருப்பதுடன் அதன் செயற்பாடுகளை ஈடுசெய்வதற்கு பயன்படுகின்றது.

 

சுவிசில் பல்வேறு வித்தியாசமான வரிகள் அறியப்பட்டுள்ளன. நேரடியான வரிகள் நாட்டுக்கு முக்கியமானவற்றை உள்ளடக்கியது: வருமான- மற்றும் சொத்துக்களுக்கான அதேபோன்று இலாபம்- மற்றும் முதலுக்கான வரிகள்.

 

இதைவிட நேரடியாகப் பெறப்படாத வரிகள் உள்ளன. இதில் பொருட்களுக்கான வரி புகையிலை வரி நாய்களுக்கான வரி மாநிலத்தினது வாகன வரி லொத்தர் வரி மற்றும் மேலதிகமானவை. ஒவ்வொரு வரியின் விதத்தைப் பொறுத்தும் அது நகரால் மாநிலத்தால் அல்லது மத்திய அரசால் பெற்றுக்கொள்ளப்படும்.