ஊதியம்

ஊதியம்

நான் எவ்வளவு ஊதியத்தைப் பெற்றுக்கொள்வேன்?

சுவிஸ் சட்டம் ஆகக் குறைந்த ஊதியத் தொகை எவ்வளவு என்பதை நிர்ணயிக்க வில்லை. ஒருசில முழு தொழில் ஒப்பந் தங்கள் அல்லது சாதாரண தொழில் ஒப் பந்தங்கள் குறிப்பிட்ட தொழில் பகுதியி னருக்கு ஆகக் குறைந்த ஊதியத் தொ கையை நிர்ணயித்துள்ளன. ஊதியத்தின் தொகையை தொழிலுக்கு நியமனம் பெறும்போது தொழில் வழங்குனர் மற்றும் ஆண் அல்லது பெண் தொழிலாளர் தீர்மானித்துக்கொள்வர்.

 

ஒரு வேளை தொழிலை செய்ய இயலாத தடைகள் ஏற்படின், அதாவது நோய், விபத்து, இராணுவ சேவை போன்றவைகளுக்கு, தொழில் வழங்குனர் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஊதியத்தைக் கட்டாய மாகத் தொடர்ந்து வழங்க வேண்டும் என சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இது எவ்வளவு காலத்திற்கு வழங்கப்படும் என்பது, தொழில் ஒப்பந்தம் எவ்வளவு காலத்திற்கானது என்பதில் தங்கியிருக்கும்.; இருப்பினும் ஊதியத்தைத் தொடர்ந்து வழங்கும் கடமை,ஒரு தொழில் ஒப்பந்தம் செய்து மூன்று மாத காலத்தின் பின்பாகவே ஆரம்பிக்கும்.