தாய்மைநிலைக்கான காப்புறுதி

தாய்மைநிலைக்கான காப்புறுதி

தாய்மைநிலைக்கான காப்புறுதி என்றால் என்ன?

சுவிசில் சட்டரீதியாயத் தீர்மானிக்கப்பட்ட தாய்மைநிலைக்கான காப்புறுதி அமுலில் உள்ளது.: அதாவது, தொழில் புரியும் தாய், குழந்தை பிறப்பிற்குப் பின்னர் 14 கிழமைகள் ஒரு விடுமுறையையும் சராசரி ஊதியத்திலிருந்து 80 வீதத்தையும் பெற்றுக்கொள்வர் (இதை தாய்மைநிலைக்கான உதவி அல்லது தாய்மைநிலைக்கான விடுமுறை எனவும் அழைப்பர்). சுவிசில் தந்தைமாருக்கான விடு முறை அமுலில் இல்லை. சில தொழில் வழங்குனர்கள் குழந்தை பிறந்த பின்பு தந்தைமாருக்கு ஊதியத்துடனான ஒருசில கிழமை விடுமுறையை வழங்குகின்றனர்.