சிறுபிள்ளைகள்

தாய்மார்- மற்றும் தந்தைமாருக்கான ஆலோசனை

தாய்மார்- மற்றும் தந்தைமாருக்கான ஆலோசனை

குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளின் பெற்றோர் தாய்மார்- மற்றும் தந்தைமாருக்கான ஆலோசனையைப் பெற முடியும். அங்கு நீங்கள், உணவு, பராமரிப்பு, கவனிப்பு மற்றும் வளர்த்தல் குறித்து இருக்கும் கேள்விகளுக்கு உதவிகளைப் பெற்றுக்கொள்வீர்கள். அத்துடன் உங்கள் பிள்ளை அடிக்கடி சண்டை பிடித்துக்கொண்டு அல்லது அமைதியில்லா திருந்தாலும் உதவிகளை நீங்கள் பெறலாம். இதற்காக நீங்கள் ஒரு ஆலோசனை நடுநிலையத்தை நாடவேண்டும். தாய்மார்- மற்றும் தந்தைமாருக்கான ஆலோசகர்கள் நீங்கள் விரும்பினால் வீட்டிற்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசி அல்லது இணையத்தள மூலமாகவோ விபரங்களைத் தெரிவிப்பர்.