கடன்

கடன்

எனக்குக் கடன் இருந்தால், நான் என்ன செய்ய வேண்டும்?

எவராவது கடன் பெற்றிருந்து, தனது நிதி நிலைமையைக் சரியாகக் கையாள முடியாது எனத் தெரிந்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் துறைசார் கடன் ஆலோசனை நிலையத்தில் உதவியைப் பெற வேண்டும். எவ்வளவு விரைவாகவோ, அவ்வளவிற்கு நலமானது! நீங்கள் எவ்வளவு காலத்திற்கு அதனுடன் காத்திருப்பீர்களோ, கடன் மேலும் அதிகரிப்பதுடன் வேறு பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

 

பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் நலன்பேணும் கடன் ஆலோசனை நிலையங்கள் உள்ளன. நகரத்தின் மற்றும் ஆலயங்களின் சமூகசேவை நிலையங்கள் மேலதிகமாக தொடர்புகொள்ளக்கூடிய இடங்களாகும். கடன் ஆலோசனை முதலில் உங்களுக்கு, உங்கள் நிதி நிலைமை குறித்து அறிந்து கொள்ள உதவும். இந்த அடிப்படையில் உங்களுடன் சேர்ந்து கடனைக் குறைப்பதற்கான ஒரு வரவு செலவுப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த ஆலோசகர்கள் நீங்கள் கடன்பட்டிருக்கும் நபர்களுடன் தொடர்பு கொள்வார்கள் (நம்பிக்கைக்குரியவர்கள்). இவர்கள் கடனை அடைக்கும் காலத்தில் கடன்கள் திரும்பப் பெறப்படாமல் இருப்பதற்கு முயற்சிப்பர் (செலுத்த வேண்டிய பணத்தைப் பின்பு செலுத்துவது, தவணைமுறையில் கட்டுவது).

தொடர்பு

  • Beratungsstelle für Schuldenfragen Graubünden (Rotes Kreuz Graubünden)

    கடன் விவகாரங்களுக்கான ஆலோசனை மையம்Steinbockstrasse 27000 Chur081 258 45 80www.srk-gr.ch